வீடமைக்கும் பணிகள் ஆரம்பம்

வடக்கு -– கிழக்கு மாகா­ணங்­க­ளில் முதற்­கட்­ட­மாக 10 ஆயி­ரம் வீடு­க­ளில் 4 ஆயி­ரத்து 750 வீடு­களை அமைக்­கும் பணி தைப்­பொங்­க­லு­டன் ஆரம்­ப­மா­க­வுள்­ள­தாக, தேசிய கொள்­கை­கள், பொரு­ளா­தார விவ­கா­ரங்­கள், மீள்­கு­டி­யேற்­றம், மறு­வாழ்வு, வடக்கு மாகாண அபி­வி­ருத்தி, தொழில் பயிற்சி, திறன்­கள் அபி­வி­ருத்தி மற்­றும் இளை­ஞர் விவ­கா­ரங் ­கள் அமைச்­சின் செய­லர் வே.சிவ­ ஞா­ன­சோதி தெரி­வித்­துள்­ளார்.


இது தொடர்­பில் அமைச்சு விடுத்­துள்ள ஊடக அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது:

4 ஆயி­ரத்து 750 வீடு­கள் அமைப்­ப­தற்கான நிதி மாவட்­டச் செய­ல­கங்­க­ளுக்கு ஒதுக்­கப்­பட்டு வேலைத்­திட்­டங்­கள் தைப்­பொங்­க­லு­டன் – நாளை ஆரம்­பிக்­கப்­ப­டு­கின்­றன. ஒவ்­வொரு வீடும் 10 லட்­சம் ரூபா­வில் அமைக்­கப்­ப­டும்.

யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் ஆயி­ரத்து 500 குடும்­பங்­க­ளும், கிளி­நொச்­சி­யில் 670 வீடு­க­ளும், முல்­லைத்­தீ­வில் 630 வீடு­க­ளும், வவு­னி­யா­வில் 450 வீடு­க­ளும், மன்­னா­ரில் 350 வீடு­க­ளும், மட்­டக்­க­ளப்­பில் 625 வீடு­க­ளும், திரு­கோ­ண­ம­லை­யில் 400 வீடு­க­ளும், அம்­பா­றை­யில் 125 வீடு­க­ளும் அமைக்­கப்­ப­ட­வுள்­ளன.

பெண் தலை­மைத்­துவ குடும்­பங்­கள், மாற்­றுத்­தி­ற­னா­ளி­களை கொண்ட குடும்­பங்­கள், காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரைக் கொண்ட குடும்­பங்­கள், சமூ­க­ம­ய­மாக்­கப்­பட்ட முன்­னாள் போரா­ளி­க­ளின் குடும்­பங்­கள், வரு­மா­னம் குறைந்த குடி­சை­க­ளில் வாழும் குடும்­பங்­கள், கண்­ணி­வெ­டி­யால் பாதிக்­கப்­பட்ட குடும்­பங்­கள், வயோ­தி­பர்­கள், இளம் சிறார்­க­ளைக் கொண்ட குடும்­பங்­கள் என்ற அடிப்­ப­டை­யில் பய­னா­ளி­கள் தெரிவு முன்­னு­ரி­மைப்­ப­டுத்­தப்­ப­டும்.

இந்த வீடு­கள் 550 சது­ர­அடி பரப்­ப­ள­வில் பய­னா­ளி­க­ளால் கட்­டப்­ப­டு­கின்ற வீடு­க­ளா­க­வும், செங்­கல் மற்­றும் சீமெந்­தி­னா­லான இரண்டு படுக்கை அறை­கள், வர­வேற்­பறை, சம­ய­லறை, மற்­றும் கழி­வ­றையை உள்­ள­டக்­கி­ய­தா­க­வும் ஓட்­டி­னால் ஆன கூரை­க­ளா­க­வும் அமை­வது கலா­சா­ரத்­துக்கு அமை­வா­ன­தா­க­வும் காணப்­ப­டு­கின்­றன.

மாவட்ட செய­லா­ளர்­கள் ஊடா­க­வும் பிர­தேச செய­லா­ளர்­கள் ஊடா­க­வும் வீட்­டுத் திட்­டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டும். இவற்­றிக்­கான கொடுப்­ப­ன­வு­கள் கட்­டம் கட்­ட­மாக வேலை­க­ளின் அடிப்­ப­டை­யில் பய­னா­ளி­க­ளுக்கு வழங்­கப்­ப­டும் – என்­றுள்­ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo


No comments

Powered by Blogger.