மீனவர்கள் மருந்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

காரை­ந­கர் கடற்­ப­ரப்­பில் நிர்­கதி­யான இந்­திய மீன­வர்­க­ளை­யும், இந்­திய மீன­வர் ஒரு­வ­ரின் சட­லத்தையும் நேற்று கடற்­ப­டை­யி­னர் மீட்­டனர்.


இந்த நிலையில் உயிரிழந்த மீனவருடன் பயணித்த ஏனைய 3 இந்திய மீனவர்களும், மருத்துவப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு விலங்கிட்டு இன்று அழைத்துச் செல்லப்பட்டனர்.

இரா­ம­நா­த­பு­ரத்­தைச் சேர்ந்த கறுப்­பையா முன்­னச்­சாமி (வயது-55) என்ற மீன­வரே உயி­ரி­ழந்­துள்­ளார்.

இவர் , மனை­வி­யும் உயி­ரி­ழந்த நிலை­யில், பிள்­ளை­கள், சகோ­த­ரர்­கள் எவ­ரும் இன்றி தனி­யாக வாழ்ந்து வந்­த­வர் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

கடற்­ப­டை­யி­ன­ரால் கைது செய்­யப்­பட்டு இரவு வரை­யில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த மீனவர்கள் காங்­கே­சன்­து­றைப் பொலி­ஸா­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்டனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo


No comments

Powered by Blogger.