தோட்டக்காணியில் உரப்பையில் வெடிபொருள்கள்!!

வவுனியா மடுக்குளம் பகுதியில் உள்ள தோட்டக் காணியில் இருந்து வெடிபொருள்களை பூவரசங்குளம் பொலிஸார் இன்று மீட்டுள்ளனர்.

வவுனியா மடுக்குளம் பகுதியில் உள்ள தனியார் காணியை அதன் உரிமையாளர் உழவியந்திரம் மூலம் கடந்த வாரம் பண்படுத்தியுள்ளார்.

பண்படுத்தப்பட்ட காணியில் உரப்பையில் சுற்றி வைக்கபட்டு சந்தேகத்திற்கிடமான பொருள்கள் இருப்பதை அவதானித்த சிறுவன் தனது தந்தைக்குப் தெரியபடுத்தியுள்ளான்.

பூவரசங்குளம் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் உரப்பொதியை சோதனையிட்டனர். அதில் மூன்று கைக்குண்டுகள் மற்றும் ரி56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தபடும் ரவைகள், கோல்சர் என்பன வைக்கப்பட்டிருந்ததை அவதானித்தனர்.

எனினும் மண்ணில் புதையுண்டு கிடப்பதால் மேலும் வெடிபொருள்கள் அதனுள் இருக்கலாம் என்று தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பாக சிறப்பு அதிரடிப் படையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

நீதி மன்றின் அனுமதியுடன் குறித்த பகுதியை ஆழமாக்கி சோதனை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colomboNo comments

Powered by Blogger.