பொங்கல் கொண்டாட்டம்!! வவுனியா!!

வவுனியாவில் தைப்பொங்கல் பண்டிகை இன மத வேறுபாடுன்றி  கொண்டாடப்பட்டது.
இந்து ஆலயங்களிலும், வீடுகளிலும் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

வவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயத்தில் கிறிஸ்தவ இளைஞர்கள் மற்றும் பங்குத்தந்தையினால் பொங்கல் பொங்கி வழிபாடு செய்யப்பட்டது.

வவுனியா பேருந்து நிலையத்தில் தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தினாலும், முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தினாலும், பொங்கல் பொங்கி, பலகாரங்களும் பரிமாறப்பட்டன.

வர்த்தக நிலையங்களுக்கு முன்பாகவும் பொங்கல் வழிபாடுகள் இடம்பெற்றன.

No comments

Powered by Blogger.