கூட்டமைப்பு எதிர்க்கட்சிக்கான சலுகையைப் பெறக்கூடாது

தமிழ்த் தேசி­யக் கூட்ட­மைப்­புக்கு எதிர்க் கட்­சிக்­கான சலு­கை­களை வழங்­கக் கூடாது என்று அடுத்த நாடா­ளு­மன்ற அமர்­வுக்கு முன்­னர் சபா­நா­ய­க­ரி­டம் வலி­யு­றுத்­த­வுள்­ளோம்
என்று தெரி­வித்­துள்­ளார் மகிந்த அணி நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், பிவித்­துரு ஹெல உறு­ம­யக் கட்­சி­யின் தலை­வ­ரு­மான உதய கம்­மன்­பில.
கொழும்­பில் நேற்று நடத்­தப்­பட்ட செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் கருத்­துத் தெரி­வித்­த­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.
அவர் தெரி­வித்­த­தா­வது-
வரவு- செல­வுத் திட்­டத்­துக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­தமை, தலைமை அமைச்­ச­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்­துக்கு எதி­ராக வாக்­க­ளித்­தமை என பல்­வேறு சாத­னை­களை இரா.சம்­பந்­தன் எதிர்க்­கட்­சித் தலை­வ­ராக இருந்­துக்­கொண்டு செய்­துள்­ளார்.
கடந்த வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற கூட்­ட­மொன்­றில் உரை­யாற்­றிய மாவை சேனா­தி­ராஜா, அமைச்­ச­ர­வை­யின் முடி­வு­க­ளைக் கூட தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­ன­ரு­டன் கலந்­தா­லோ­சித்­து­தான் அரசு மேற்­கொள்­கின்­றது என்று கூறி­யி­ருந்­தார்.
நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சுமந்­தி­ரனோ, வடக்கு அபி­வி­ருத்தி அமைச்சை தமது வேண்­டு­கோ­ளுக்கு இணங்­கவே ரணில் விக்­கி­ர­ம­சிங்க பெற்­றுக்­கொண்­டார் என்­றுக் குறிப்­பிட்­டுள்­ளார்.
அவ்­வா­றா­யின், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பை நாம் இந்த அர­சின் பங்­கா­ளி­யா­கவே கருத வேண்­டும். இப்­ப­டி­யா­ன­வர்­க­ளுக்கு இனி­யும் எதிர்க்­கட்­சி­யில் இருக்க தகு­தி­யில்லை.
இலங்கை வர­லாற்­றி­லேயே இவ்­வா­றான ஒரு கட்சி இருந்­த­தில்லை. அத­னால் நாடா­ளு­மன்­றத்­தின்­போது எதிர்க்­கட்சி சலு­கை­க­ளைப் பெற்­றுக்­கொள்­ள­வும், எதிர்க் கட்­சி­யாக விவா­தத்­தில் உரை­யாற்­ற­வும் நாம் இந்­தக் கட்­சிக்கு இனி­யும் இட­ம­ளிக்­கப்­போ­வ­தில்லை.
அடுத்த அமர்­வுக்­குகு முன்­னர் இது­தொ­டர்­பில் சபா­நா­ய­க­ரு­டன் கலந்­து­ரை­யாடி தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பை அர­சின் பங்­கா­ளி­யாக அங்­கீ­க­ரிக்க வேண்­டும் என்று கோர­வுள்­ளோம்.- என்­றார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.