உலகப்புகழ்பெற்ற கும்பமேளா தொடங்கியது

உலகப்பிரசிதிப்பெற்ற கும்பமேளா திருவிழா நேற்று நள்ளிரவு முதல் தொடங்கியது. நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்து வந்த சாதுக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கும்பமேளாவிற்கு வரும் பக்தர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
உலகின் மிகப்பெரிய தற்காலிக நகரம் உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் நடைபெறும் கும்பமேளாவுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அலகாபாத், நாசிக், உஜ்ஜையினி, ஹரித்துவார் ஆகிய இடங்களில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூரண கும்பமேளா நடைபெறுகிறது. அதுபோலவே ஹரித்துவார், அலகாபாத்தில் மட்டும் 6 ஆண்டுக்கு ஒருமுறை அரை கும்பமேளா விழாவும் நடைபெறுவது வழக்கம்.
இந்த ‌கும்பமேளாவுக்காக அனைத்து ஏற்பாடுகளுக்காக சுமார் 2 ஆயிரத்து 900 கோடி ரூபாய் செலவிடப்படுகின்றன. கும்மேளாவிற்காக சிறப்பு விமானங்கள், சிறப்பு ரயில்கள், 600 தற்காலிக சமையலைரைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும் 1 லட்சத்து 22 ஆயிரம் கழிப்பறைகள், 50 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, ஆயிரத்து 200 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. கும்பமேளாவின்  பாதுகாப்பிற்காக 20 ஆயிரம் போலீசார் மற்றும் 6 ஆயிரம் ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 
திருவிழாவில் கலந்துகொள்வதற்காக மாநிலம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான சாதுக்கள், அகோரிகள் தினமும் பாரம்பரிய முறையில் யானை, ஒட்டகம், குதிரை உள்ளிட்டவை மீது சவாரி செய்தவாரே பிர‌யாக்ராஜ் நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். மார்ச் மாதம் 4ம் தேதி வரை நடைபெறும் கும்பமேளாவில் 12 கோடி பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.