16.01.1985 அன்று முல்லைத்தீவு முள்ளியவளையில் சிறிலங்கா இராணுவத்தினரால் படுகொலை செய்யப்படட நாள் இன்று!

16.01.1985 அன்று முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளையில் சிறிலங்கா இராணுவத்தினரால் படுகொலை செய்யப்படட 17 உறவுகளின் 34ம் ஆண்டு நினைவு வணக்கநாள் இன்றாகும்.

இச்சம்பவத்தில் தனது கணவரையிழந்த தவரத்தினம் திலகவதி சம்பவம் பற்றிக் கூறியதாவது:

“அதிகாலை 4.30 மணியளவில் வீடுகளுக்கு வந்த இராணுவத்தினர் சில பெண்களோடு எனது கணவர், மகன் உட்பட பதினேழு பேரைக் கைது செய்ததுடன், சிலரது வீடுகளை எரித்து சொத்துக்களையும் சூறையாடினர். பின் கைது செய்தவர்களை அருகிலிருந்த காடு நோக்கிக் கொண்டு சென்றனர். பின் பல சூட்டுச் சத்தங்கள் கேட்டது. அதன்பின் இராணுவத்தினரின் வாகனங்கள் முல்லைத்தீவு நோக்கிச் சென்றன. அதில் கொல்லப்பட்டவர்களின் உடல்களையும் படுகாயமடைந்தவர்களின் உடல்களையும் அதன் மேல் சைக்கிள்கள் மற்றும் பொருட்களையும் ஏற்றி எடுத்துச் சென்றனர். 

அடுத்தநாள் சமாதான நீதவானுடன் முல்லைத்தீவு சென்று பார்த்தபோது எல்லோரும் படுகொலை செய்யப்பட்டு உடலில் ஒரு துணி இல்லாத சடலங்களாகக் கிடந்தது. அவர்களது உடலை எடுத்துச் செல்லக்கேட்டபோது அவர்களைக் கொட்டி (புலிகள்) என்று கையெழுத்திட்டாலே கொண்டு போகமுடியும் என்றனர். அவர்கள் எல்லோரும் பொதுமக்கள் தவறாக கையெழுத்திட்டு உடல்களை பெற விரும்பாததால், அங்கு விட்டுவிட்டு வந்தோம்.”

16.01.1985 அன்று முள்ளியவளைப் படுகொலையில் கொல்லப்பட்டோர் விபரம்:

01. நாகரெட்ணம் ஸ்ரீஸ்கந்தராசா
02. குமாரசாமி விஜயகுமாரி (வீட்டுப்பணி)
03. பிலிப்பையா அன்ரன்யோகராசா (வயது 17 - கடற்தொழில்)
04. தம்பையா விவேகானந்தம் (மாணவன்)
05. மார்க்கண்டு தெட்சணாமூர்த்தி (வயது 19 - கடற்தொழில்)
06. செல்லத்துரை நவரட்ணம் (விவசாயம்)
07. செல்லத்துரை குமாரசாமி (விவசாயம்)
08. சுப்பன் சின்னன்
09. சின்னன் அன்னலட்சுமி (வீட்டுப்பணி)

குறிப்பு:- இச்சம்பவத்தில் பாதிப்படைந்த அனைவரது பெயர் விபரங்களையும் பெறமுடியவில்லை.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.