சிங்களத்தின்அகோரமுகம் அம்பலம் கைதிகள் மீது காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல்!

சிறிலங்காவில் அங்குணு கொலபெலஸ்ஸ சிறைசாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் கடந்த வருடம் நவம்பர் 22ம் திகதி சிறைச்சாலை காவலர்களால் தாக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படும் அதிர்ச்சி காணொளி வெளியாகியிருக்கின்றது. இந்த சம்பவம் தொடர்பில் அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறைக்கைதிகளை உரிமைகளை பாதுகாப்பது ம்காக்கும் குழுவின் தலைவர்  சட்டத்தரணி சேனக்க பெரேரா வேண்டுகோள் விடுத்ததுடன் ,குறித்த சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்யப்பட்டுளதாகவும் தெரிவித்தார். தமது சொந்த நாட்டு மக்களையே இவ்வாறு வதைக்கும் சிங்கள தேசம் போரின் போது சரணடைந்த தமிழ் மக்களை எவ்வாறு கொடுமைப்படுத்தியிருப்பர் என்பது அனைவரும் சிந்திக்க வேண்டும்.

No comments

Powered by Blogger.