பருத்தித்துறை நகரசபையின் கூட்டமைப்பின் உப தவிசாளர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்!

வெள்ளநிவாரண பொருட்களில் உப தவிசாளர் ஊழல் செய்ததாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி
குற்றம்சாட்டி கடந்த  புதன்கிழமை நகரசபையில் விசேட கூட்டம் கூட்டப்பட்டது.இக் கூட்டத்தின் பின் உப தவிசாளர் திருமதி.மதினி நெல்சன் அவர்கள் இரண்டு நாட்களில் பதில் அளிப்பதாகக் கூறியிருந்தார்.
இன்றைய தினம்,பதிவுத்தபாலில் தவிசாளருக்கு முகவரியிட்டு அனுப்பிவைக்கப்பட்ட பதிலில்,ஊழல் குற்றச்சாட்டுப் பற்றி எவ்வித பதிலும் வழங்கப்படாது,கூட்டமைப்பின் தலைமைப்பீடம் தன்னை  தொடர்ந்தும் உப தவிசாளராக நியமித்திருப்பது என்ற சாரப்பட கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
ஊழல் சம்பந்தமாக எந்த பதிலிலும் அளிக்கப்படாததினால்,இன்றைய தினம் உப தவிசாளருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை தவிசாளரிடம் கையளித்துள்ளது.இவ் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு கூட்டமைப்பின் உறுப்பினர்கள் 5 பேர் தவிர,ஏனைய 10 உறுப்பினர்களும் ஆதரவளித்துள்ளார்கள்.
இவ் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான விசேட கூட்டம் எதிர்வரும் 17 ம் திகதி,நகரசபையில் நடைபெறவுள்ளது."தூய கரங்கள் தூய நகரம்" என்ற தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் வாக்குறுதியின் படி,ஊழலிற்கு எதிராக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தொடர்ந்தும் போராடும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.