மன்னாரில் இதுவரை 300 மனித எலும்புக்கூடுகள் மீட்பு!

மன்னார் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகளின் போது இதுவரை சுமார் 300 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

முனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டுவரும் குழுவிற்குப் பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரியான சமிந்த ராஜபக்ஷ இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “மன்னார் நகர நுழைவுப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் அகழ்வுப் பணிகள் இன்று 130 ஆவது நாட்களை கடந்து இடம்பெற்று வருகின்றன.

இதுவரை 300 மனித எலும்புக்கூடுகள் குறித்த வளாகத்தில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 294 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக அகழ்ந்து எடுக்கப்பட்ட 294 மனித எலும்புக்கூடுகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மாதிரிகள் சில புளோரிடாவிற்கு அனுப்ப மன்னார் நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் 23ஆம் திகதி குறித்த மனித எச்சங்கள் ஆய்வுக்காக புளோரிடா கொண்டு செல்லப்பட இருக்கின்றன. குறித்த ஆய்வு முடிவுகள் ஒப்படைக்கப்பட்டு இரு வாரங்களில் அறிவிக்கப்படும்.

அதுவரை மன்னார் மனிதப் புதைகுழி தொடர்பான அகழ்வுப் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெறும்” என அவர் மேலும் தெரிவித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.