அனிஷா தான் நிச்சயிக்கப்பட்ட பெண்!

நடிகர் விஷால், தனது திருமண அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக ட்விட்டரில் அறிவித்துள்ளார். நடிகர் சங்க பொதுச்செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான நடிகர் விஷால், திருமணம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் பரவி வந்தன. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் விஷாலுக்கும் ஆந்திராவை சேர்ந்த தொழிலதிபர் மகள் அனிஷாவுக்கு திருமணம் செய்து வைக்க விஷாலின் பெற்றோர் முடிவு செய்துள்ளதாகவும், இதற்கு விஷால் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், விரைவில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறும் எனவும் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, விஷால், தனக்கு திருமணம் நிச்சயமானால் நானே முறைப்படி அதிகாப்பூர்வமாக மகிழ்ச்சியுடன் அறிவிப்பேன் என கூறியிருந்தார். இதனிடையே, விஷால் திருமணம் செய்யவுள்ள அனிஷா இவர் தான் என சமூகவலைதளங்களில் புகைப்படம் ஒன்று வைரலாக பரவி வந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்து வந்த விஷால், தற்போது அவர் திருமணம் செய்யவுள்ள அனிஷாவுடன் சேர்ந்து இருக்கும் போட்டோ ஒன்றுடன் தனது அதிகாரப்பூர்வமான திருமண அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.