பேர்லின் தமிழாலயத்தின் தமிழர் திருநாள் 2019

தமிழால் அடையாளம் கொள்ளும் தனித்துவ நாள் எனும் விருதுவாக்கியத்துடன் முன்னெடுக்கப்படும் பேர்லின் தமிழாலயத்தின் தமிழர் திருநாள் 2019 

தைப்பொங்கல் – தமிழ்ப் புத்தாண்டு - தமிழர்க்கு ஒரு நாள் - தமிழால் அடையாளம் கொள்ளும் தனித்துவ நாள் – எனும் விருதுவாக்கியத்துடன் முன்னெடுக்கப்படும் பேர்லின் தமிழாலயத்தின் தமிழர் திருநாள் 2019 எதிர்வரும் 20.01.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 12 மணிக்கு Zehlendorf உள்ளூராட்சி சபையில் நடைபெறவுள்ளது. 

தொன்மைத் தமிழர் சமூகத்தில் அறமும் அழகியலும் எனும் கருத்துக்கு அமைய சிறப்புக் கலைநிகழ்வுகள் நடைபெறவுள்ளது.  புலம்பெயர்ந்து நீட்சியுறம் வாழ்வில் தமிழால் ஒருத்துவமாகி சாதி- மதம்- தேசம் கடந்த தமிழ்க் குடும்பங்களாக ஒன்றிணைந்து யேர்மன் தலைநகரத்தில் நடாத்தப்படும் பண்பாட்டு நிகழ்வரங்கமான தமிழர் திருநாளில் புதிய பரிணாமத்துடன் ஒன்றுகூடி பொங்கிடுவோமாக. 

இனிய பொங்கல் – புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்து அனைவரையும்  வருக என அன்புடன் அழைக்கின்றோம். 

தமிழாலயம் பேர்லின்
நிர்வாகம்

No comments

Powered by Blogger.