தவறான செய்திகளை பரப்பாதீர்கள்...: ஏ.ஆர்.முருகதாஸ் எச்சரிக்கை


தனது அடுத்த படத்தின் பெயர் நாற்காலி அல்ல என்று ஏ.ஆர்.முருகதாஸ் ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார். சர்கார் படத்தின் வெற்றிக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் இணைய இருப்பதாக செய்திகள் வெளியாகின. இதற்கிடையே கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள பேட்ட படம் பெரும் வெற்றியை பெற்றுள்ளது. எனவே விரைவில் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் ரஜினிகாந்த் இணையும் படம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்துக்கு நாற்காலி என்று பெயர் வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தற்போது படத்தின் தலைப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்திருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ், ’எனது அடுத்த படத்தின் தலைப்பு நாற்காலி அல்ல. தவறான வதந்திகளை பரப்பாதீர்கள்’ என்று கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.