காதலரை அறிமுகப்படுத்திய சிம்பு, தனுஷ் நாயகி


ஒஸ்தி, மயக்கம் என்ன உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து கவனம் ஈர்த்த நடிகை ரிச்சா கங்கபாத்யாய் தனது காதலரை அறிமுகப்படுத்தி தனக்க நிச்சயதார்த்தம் நடந்தது குறித்து ட்விட்டரில் தெரிவித்துள்ளார். செல்வராகவன் இயக்கத்தில் வந்த மயக்கம் என்ன படத்தில் தனுஷுக்கு நாயகியாக நடித்தவர் ரிச்சா. அந்த படத்தின் மூலம் பெரும் கவனம் ஈர்த்துள்ளார். இதனையடுத்து சிம்புவுடன் ஒஸ்தி படத்தில் நடித்தார் ரிச்சா. தமிழில் இரண்டே படங்கள் நடித்திருந்தாலும் மற்ற மொழிகளில் பல படங்கள் நடித்துள்ளார் கடந்த சில வருடங்களாக இவர் சினிமாவில் இருந்து ரிச்சா விலகியே இருக்கிறார். இந்நிலையில் தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு நிச்சயதார்த்தம் நடந்தது குறித்து அறிவித்துள்ளார். மேலும் நிச்சயதார்த்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.