வெள்ளாங்குளத்தினைச் சேர்ந்த முன்னாள் போராளி

மிக இளவயதிலேயே போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திநெருப்பாற்றில் தீக்குளித்து ஆனையிறவு மீட்புச்சமரில் காலிலும் கையிலும் காயமுற்றும் பின்னர் நடந்த சண்டை ஒன்றிலே இராணுவ முற்றுகை ஒன்றில் இருந்து தப்பிக் முடியாமல் சரணடையக் கூடாது என்ற ஓர்மத்துடன் சயனைட் கடித்திருந்தார்.


இதனால் பேசும் திறன் ,நடக்கும் திறன் இழந்து எது வித வருமானமும் இன்றி கட்டிய மனைவியையும் பெற்ற மூன்று பிள்ளைகளையும் வாழ் வைப்பதற்காக வெள்ளாங்குளத்தில் இருந்து தங்கத்திலே கலசம் வைத்த முருகனின் வாயிலிலே கலசமாக இருக்க வேண்டியவன் ஏன் சந்நிதானத்திலே பூஐிக்க வேண்டியவன் பிச்சை எடுக்கின்ற அவலம்.


பாவம் தொலைய வழிபாடு ஆற்ற வருபவர்கள் பெரிதாக கண்டு கொண்டதாக தெரியவில்லை நல்மனம் கொண்ட ஓரிருவர் சிறு சிறு உதவிகள் புரிந்துள்ளனர்.

ஆனால் பிச்சை எடுக்காமல் வாழ வழி ஏற்படுத்தாமை கவலைக்குரியது. இளமைக்காலக் கால கனவுகளை தொலைத்து ”சாவரும் போதிலும் தனலிடை வேகினும் சந்ததி துாங்காது…..” என எமக்காக வீழ்ந்தவர்களை நாமும் மிதித்து தெருவில் வீசி எறிந்து விட்டோம்.

இது தான் தமிழன் அழிந்ததற்கும் அழிகிறதுக்கும் காரணம். யார் என்ன செய்தாலும் நாம் கரம் கொடுப்போம் எம் மூச்சு உள்ளவரை.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.