வடக்கின் கல்வி நிலை குறித்து வடக்கு ஆளுநர் கவலையாம்!

வட மாகாணத்தின் தற்போதைய கல்வி நிலை தன்னை மிகவும் துயரமடையச் செய்துள்ளதாக வட. மாகாண புதிய ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.


யாழ் ஒஸ்மானியா கல்லூரியில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற கால்கோள் விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

முன்னைய காலப்பகுதியில் வட. மாகாணத்தின்; கல்வி நிலை சிறந்து விளங்கியதுடன், யாழில் கல்வி பயில்வது மதிப்பிற்குரிய விடயமாகவும் காணப்பட்டதாக தெரிவித்த அவர், ஆனால், தற்போது வட மாகாணம் கல்வியில் பாரிய பின்னடைவை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்தார்.

எனவே, எதிர்காலத்தில் கல்விக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்திய ஆளுநர், அதற்கான கட்டளையை வழங்குவதற்கு தான் தயாராகவிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.