நச்சு’ன்னு ஒரு தீர்ப்பு: ‛டான்ஸ் பார்’ நடத்தினா தப்பில்லீங்கோ!மும்பையின் பல இடங்களில் இயங்கி வந்த டான்ஸ் பார்களுக்கு கடும் கட்டுப்பாடு விதித்து, மாநில அரசு உத்தரவிட்டிருந்தது. டான்ஸ் பார்களில் நடக்கும் ஆபாசங்கள், கொலைகள் மற்றும் பித்தலாட்டங்களை தடுக்கும் வகையில், மாநில அரசின் உத்தரவில் பல அம்சங்கள் இடம் பெற்றிருந்தன.


இந்நிலையில், டான்ஸ் பார் உரிமையாளர் சங்கத்தின் சார்பில், மாநில அரசின் உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாெடரப்பட்டது. மாநில அரசின் சார்பில் விதிக்கப்பட்ட கடும் கட்டுப்பாடுகளால், டான்ஸ் பார் நடத்துவதற்கான லைசென்ஸ் பெறுவதில் பெரும் சிக்கல் இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

டான்ஸ் பார்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது தனி மனித உரிமைகளை மீறும் செயல். டான்ஸ் பார்களில், மது பரிமாறுவதற்காக தனி இடம் ஒதுக்கக் கூறும் மாநில அரசின் உத்தரவு ஏற்கக் கூடியதாக இல்லை.

நடன மங்கைகளுக்கு டிப்ஸ் காெடுக்கவும் தடை விதிக்க முடியாது. அதில் எந்த தவறும் கிடையாது. பள்ளிகள் செயல்படும் இடங்களை சுற்றி, ஒரு கி.மீ.,சுற்றளவுக்கு உட்பட்ட இடங்களில் டான்ஸ் பார் நடத்த முடியாது என மாநில அரசின் உத்தரவையும் ஏற்க முடியாது.

நல்ல ஒழுக்கசீலர்களை மட்டுமே இனம்கண்டு, பார்களுக்குள் அனுமதிப்பது என்பது நடக்காத காரியம். எனவே, குறிப்பிட்ட நபர்களைத் தான் அனுமதிக்க வேண்டும் என்பதும் சரியானதல்ல.

இவ்வாறு அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் ‛நச்’சென்ற இந்த தீர்ப்பால், 2005 முதல் அமலில் உள்ள மாநில அரசின் உத்தரவு முடிவுக்கு வருகிறது. இனி, எந்த தடையும் இன்றி, பள்ளி, கல்லுாரி வளாகங்களுக்கு மிக அருகாமையில் கூட, ஆபாச நடனங்கள் அரங்கேறும், டான்ஸ் பார்களை நடத்தலாம்.

அதன் உள்ளே அரங்கேறும் கூத்துகளை எந்த கண்காணிப்பு கேமராவும் படம் பிடிக்க முடியாது. ஆபாச பிரியர்கள், தங்கள் இஷ்டம் போல், நடன மங்கையர்க்கு பணத்தை வாரி வழங்கலாம். இப்படி பல ‛நல்ல’ விஷயங்கள் அரங்கேற, இந்த தீர்ப்பு வழிவகை செய்துள்ளது. 
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

No comments

Powered by Blogger.