சுமந்திரன் ஊடகங்களை தவறாக விமர்சிப்பதாக்கு என்ன அருகதை?

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் ஊடகங்களை தவறாக விமர்சிப்பதாக முன்னாள் வட. மாகாணசபை உறுப்பினர் வை.தவநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்.இந்த விடயம் தொடர்பில் இன்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த முன்னாள் வட. மாகாணசபை உறுப்பினர் வை.தவநாதன், தமிழரசு கட்சி யுத்த காலத்தினைப் போன்றே  தற்போதும்  செயற்பட்டு வருவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

தமக்கு சாதகமான கருத்துக்களை தெரிவிக்கும்போது மௌனமாக இருக்கின்றவர்கள், எதிர்மறையான கருத்துக்களை ஊடகங்கள் வெளிக்கொணரும்போது இவ்வாறு விமர்சனங்களை முன்வைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசு வடக்கு கிழக்கில் அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுக்கும்போது தமது கருத்து பெறப்பட வேண்டுமென  தெரிவித்த சுமந்திரன், நேற்றைய நிகழ்வில் அவ்வாறு தெரிவிக்கவில்லை என குறிப்பிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உண்மையில் இவர்கள் அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை வகித்தால் மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும் என்பதற்காக அவ்வாறு அமைச்சுக்களை பொறுப்பேற்காது, அமைச்சுக்களை அடக்கி ஆளும் வகையில் செயற்படுகின்றமை அப்பட்டமாக தெரிவதாகவும் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

யாழில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், சில தொலைக்காட்சி ஊடகங்கள் பொய்யான செய்திகளை பரப்புகின்றன என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

No comments

Powered by Blogger.