இரணைமடு குளத்தடியில் 99 பானைகளில் பொங்கல்!

கிளிநொச்சி – இரணைமடுகுளம் புனரமைக்கப்பட்டு நீர்பாசனத்திற்காக நீர் திறந்துவிடப்பட்டு 99 ஆவது நிறைவை முன்னிட்டு விசேட பொங்கல் விழா இடம்பெற்றது.


கிளிநொச்சி கனகாம்பிகை அம்மன் ஆலயத்தில் இந்த நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது.

இரணைமடு விவசாய சம்மேளனத்தின் ஏற்பட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது பொங்கல் நிகழ்வின் பிரதான பொங்கல் பானையினை வட.மாகாண சபையின் முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன்,  வட.மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை ஆகியோர் பொங்கலிட வைத்தனர். தொடர்ந்து இரணைமடு விவசாயிகளினால் பொங்கலிடப்பட்டது.

இந்த நிகழ்வில் முன்னாள் விவசாய அமைச்சர் ஐங்கரநேசன், வட.மாகாணசபை முன்னாள் உறுப்பினர் பசுபதிபிள்ளை உள்ளிட்ட பெருமளவான மக்களும் கலந்துகொண்டனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colomboNo comments

Powered by Blogger.