புதிய அரசியலமைப்பானது ஒற்றையாற்சியாகவே அமையப்போகின்றது!
புதிய அரசியலமைப்பு தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்பு சபையில் பேசிய பேச்சின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பானது ஒற்றையாற்சியாகவே அமையப்போகின்றது என முன்னால் வடக்கு மாகாண எதிர்கட்சி தலைவர் சி.தவரசா தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில் இனிமேலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நம்பிக்கொண்டிருப்பது பகல் கனவாகவே அமையும் என்றார்.
இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை அரசியலமைப்பு சபையில் சமர்பிக்கப்பட்ட நிபுணர் குழுவின் வரைபு தொடர்பாக என்னால் அறிக்கை வெளியிடப்பட்டது.
அப் புதிய அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள விடயங்கள் சமஸ்டிக்கு முரணாக அமைந்துள்ளது. முழுமையாக தமிழ் அபிலாஷைகளை தீர்காது எனவும் சில திருத்தங்களுடன் தற்காலிகாக ஏற்பாடாக இதனை ஏற்கலாம் எனவும் கூறினேன்.
ஆனால் அப் புதிய அரசியலமைப்பு தொடர்பாக அரசியலமைப்பு சபையில் ரணில் உரையாற்றும் போது, குறித்த இப் புதிய அரசியலமைப்பானது தற்போதுள்ள அரசியலமைப்பின் பிரிவு 2 மற்றும் 9 ஆகிய சரத்துக்களை பாதுகாத்தே கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இத்தகைய ரணில் விக்கிரமசிங்கவின் உரையின் அடிப்படையில் பார்க்கும் போது கொண்டுவரப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பானது ஓற்றையாட்சியாகவே அமையும் என்பது தெரிகின்றது எனவும் முன்னால் வடக்கு மாகாண எதிர்கட்சி தலைவர் தவராசா தெரிவித்தார்.
எனவே தான் புதிய அரசியலமைப்பில் ஒற்றையாட்சி தான் வரப்போகின்றது என்பதையே கூறினேன். சமர்பிக்கப்பட்ட அரசியலமைப்பு வரைபு பிழையில்லை. ஆனால் ரணிலின் கருத்துபடி ஒற்றையாட்சியே வரப்போகின்றது என்றே கூறினேன் என்றார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo

கருத்துகள் இல்லை