ஈழத்து திரைப்பட இயக்குனரின் தாயாரும் நாட்டுப்பற்றாளர் நவரத்தினத்தின் மனைவி கனகாம்பிகை நவரத்தினம் காலமானார்!

திருமதி கனகாம்பிகை நவரத்தினம் (ஓய்வு பெற்ற ஆசிரியர்-நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியாலயம்) இன்று (18.01.2019) அன்று காலமானார். அன்னார் நாட்டுப்பற்றாளர் பரமநாதன் நவரத்தினம் ( பொலிசர்) அவர்களின் மனைவியும், கேசவராஜன் (ஈழ திரைப்பட இயக்குனர்-நிதர்சனம்), திருமதி சியாமா துரைரட்ணம் (வடமாகாண பணிப்பாளர், ஆயுள்வேத திணைக்களம், மஞ்சுளா ஆகியோரின் அன்பு தாயாரும் கனகலிங்கம் (ஓய்வு பெற்ற லிகிதர்), சண்முகநாதன் (ஓய்வுபெற்ற ஆசிரியர்), சண்முகரட்ணம் (ஓய்வுபெற்ற பிரதம கணக்காளர்), உத்தமராணி ஆகியோரின் சகோதரியுமாவார், அன்னாரின் இறுதிகிரிகைகள் 21.01.2019 அன்று அரியாலையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று மாலை 03.00 மணியளவில் தகன கிரிகைக்காக கொண்டு செல்லப்படும்.
கருத்துகள் இல்லை