ஊழலை விசா­ரிக்க ஆணைக்­குழு!!

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன – தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­ சிங்க ஆகி­யோ­ரின் தலை­மை­யி­லான கூட்டு அர­சில் இடம்­பெற்­றன என்று கரு­தப்­ப­டும் ஊழல்­ களை விசா­ரிப்­ப­தற்­கா­கத் தானே ஆணைக்­கு­ழுவை அமைக்­கும் நிலைக்­குத் தள்­ளப்­பட்­டுள்­ளார் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன.

2015ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 15ஆம் திகதி முதல் 2018ஆம் ஆண்டு டிசம்­பர் 31ஆம் திகதி வரை நாட்­டில் இடம்­பெற்­றன என்று கூறப்­ப­டும் மோச­டி­கள் குறித்து விசா­ரிக்க இந்த ஆணைக்­குழு நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது.
அரச தலை­வர் மைத்­தி­ரி­யின் உத்­த­ர­வின் பிர­கா­ரம் இந்த ஆணைக்­குழு நேற்று நிய­மிக்­கப்­பட்­டது என்று அரச தலை­வ­ரின் ஊட­கப் பிரிவு தெரி­வித்­துள்­ளது.
குறித்த ஆணைக்­கு­ழு­வுக்­குத் தலை­வ­ராக ஓய்­வு­பெற்ற நீதி­ய­ர­சர் உபாலி அபே­ரத்ன நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார். அத்­தோடு சரோ­ஜினி வீர­வர்­தன, எல்.ஆர்.டி.சில்வா மற்­றும் கே.ஏ.பிரே­ம­தி­லக, விஜே அம­ர­சிங்க ஆகி­யோர் உறுப்­பி­னர்­க­ளாக நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

கடந்த அர­சு­க­ளில் இடம்­பெற்ற மோச­டி­கள் தொடர்­பாக ஆராய அரச தலை­வ­ரால் பல ஆணைக்­கு­ழுக்­கள் நிய­மிக்­கப்­பட்டு விசா­ர­ணை­கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. எனி­னும் கூட்டு அர­சி­லும் ஊழல் மோச­டி­கள் இடம்­பெற்­றன என்று குற்­றச்­சாட்­டுக்­கள் முன்­வைக்­கப்­பட்­டன. இந்­தப் பின்­ன­ணி­யில் இந்த ஆணைக்­குழு நிய­மிக்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.