சவேந்­திர சில்வா நிய­ம­னத்­துக்கு -அமெ­ரிக்கா கண்­ட­னம்!!

இலங்­கை­யில் படைகளின் பிரதானியாக சவேந்­திர சில்வா நிய­மிக்­கப்­பட்­ட­மை­யா­னது இலங்கை – அமெ­ரிக்கா இடை­யி­லான பாது­காப்பு ஒத்­து­ழைப்­பைப் பாதிக்­கும் என்று அமெ­ரிக்க நாடா­ளு­மன்­றத்­தின் அய­லு­ற­வுக் குழுத் தலை­வர் எலி­யட் ஏஞ்­சல் தெரி­வித்­தார்.

‘‘போர்க்­குற்­றங்­க­ளில் ஈடு­பட்­ட­வர்­க­ளில் முக்­கிய பங்கு வகித்­தார் என்று ஐ.நாவி­னால் குற்­றம்­சாட்­டப்­பட்ட மேஜர் ஜென­ரல் சவேந்­திர சில்வா, இலங்­கை­யின் படைகளின்தலைமை அதி­கா­ரி­யாக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளமை கவ­லையை ஏற்­ப­டுத்­து­கி­றது.

இது அமெ­ரிக்கா – இலங்கை இடை­யி­லான பாது­காப்பு ஒத்­து­ழைப்­புக்­குப் பாதிப்பை ஏற்­ப­டுத்­தக் கூடும். போர்க்­குற்­ற­வாளி என்று ஐ.நா நம்­பு­கின்ற ஒரு­வரை, இரா­ணு­வத் தலைமை அதி­கா­ரி­யாக நிய­மித்­துள்ள நிலை­யில், போர்க்­குற்­ற­வா­ளி­கள் பொறுப்­புக்­கூற வைப்­ப­தில் உங்­க­ளின் நேர்மை எப்­படி நிரூ­பிக்­கப்­ப­டும்’ என்­றும் எலி­யட் கேள்வி எழுப்­பி­யுள்­ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.