அமெரிக்க குடி­யு­ரிமை தொடா்பாக கோத்­த­பாய அளித்த பதில் !!

ஒரு நாட்­டின் குடி­யு­ரிமையை வைத்­துக் கொள்­வ­தும் நீக்­கிக் கொள்­வ­தும் என் தனிப்­பட்ட விட­யம்.
இத­னால் யாருக்­கும் பிரச்­சினை இல்லைஎன்று தெரி­வித்­தார் முன்­னாள் பாது­காப்­புச் செய­லர் கோத்­த­பாய ராஜ­பக்ச.

கடந்த அர­சின் ஆட்­சிக்­கா­லத்­தில் டீ.ஏ.ராஜ­பக்ச நினைவு அருங்­காட்­சி­ய­கத்தை அமைக்க அரச நிதி தவ­றாக பயன்­ப­டுத்­தப்­பட்­ட­தாக குற்­றஞ்­சாட்­டப்­பட்­டுள்­ளது. அது தொடர்­பான விசா­ர­ணைக்கு நேற்று வியா­ழக்­கி­ழமை மேல் நீதி­மன்­றத்­தில் கோத்­த­பாய ராஜ­பக்ச முன்­னி­லை­யா­கி­யி­ருந்­தார்.

அதன் பின்­னர் செய்­தி­யா­ளர்­கள், அவ­ரி­டம் அமெ­ரிக்­கக் குடி­யு­ரிமை தொடர்­பா­கக் கேள்­வி­யெ­ழுப்­பி­னர். அதற்கு பதி­ல­ளித்­த­போதே கோத்­த­பாய இவ்­வாறு தெரி­வித்­தார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது, ‘குடி­யு­ரிமை என்­பது எனது தனிப்­பட்ட விட­யம். அதனை வைத்­துக்­கொள்­ள­வும் முடி­யும், நீக்­கிக்­கொள்­ள­வும் முடி­யும். அத­னால் யாருக்­கும் பிரச்­சி­னை­யில்லை. ஒரு மனி­த­னைக் கட்­டி­வைக்க முடி­யா­து­தானே?. ஜன­நா­ய­கத்­தின் உய­ரிய நிலை­யில் இருப்­ப­தாக அமெ­ரிக்கா கூறு­கி­றது. அவ்­வாறு கூறு­ப­வர்­கள் ஒரு மனி­த­னின் அடிப்­படை உரி­மை­யைக் கட்­டி­வைக்க மாட்­டார்­கள்’ என்­றார்.

எதிர்­வ­ரும் அரச தலை­வர் தேர்­த­லில் கோத்­த­பாய ராஜ­பக்ச கள­மி­றக்­கப்­ப­ட­லாம் என்ற கருத்­துக்­கள் அண்­மைக் கால­மாக வெளி­வந்­த­வண்­ண­முள்­ளன. சுதந்­தி­ரக் கட்­சி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் டிலான் பெரே­ரா­வும் இத­னைத் தெரி­வித்­தி­ருந்­தார்.

ஆனால், இரட்­டைக் குடி­யு­ரிமை கொண்­ட­வர்­கள் தேர்­த­லில் போட்­டி­யிட்டு வெற்­றி­பெற்­றால் அவர்­க­ளது நிய­ம­னங்­கள் செல்­லு­ப­டி­யா­காது. கோத்­த­பாய அமெ­ரிக்­கக் குடி­யு­ரிமை பெற்­ற­வர் என்ற ரீதி­யில், அவ­ரது அமெ­ரிக்க குடி­யு­ரி­மையை கைவிட்­டால் மாத்­தி­ரமே தேர்­த­லில் போட்­டி­யி­ட­லாம் என ஐக்­கிய தேசி­யக் கட்சி குறிப்­பிட்டு வரு­கின்­றது. இத்­த­கை­ய­தொரு பின்­ன­ணி­யி­லேயே கோத்தா இவ்­வாறு தெரி­வித்­துள்­ளார்.

இதே­வேளை, அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன – தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யில் அமைக்­கப்­பட்ட கூட்டு அர­சில், ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­ன­ணி­யின் சார்­பில் போட்­டி­யிட்டு வெற்­றி­பெற்ற கீதா குமா­ர­சிங்­க­வின் நாடா­ளு­மன்ற உறுப்­பு­ரிமை, இரட்­டைக் குடி­யு­ரிமை கார­ண­மாக பறிக்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.