லெப்.கேணல் ராதாவின் தந்தையரும் நாட்டுப்பற்றாளருமான கனகசபாபதி அவர்கள் காலமானார்

லெப்.கேணல் ராதாவின் தந்தையரும் நாட்டுப்பற்றாளருமான கனகசபாபதி அவர்கள் 14.01.2019 அன்று காலமானார்!


தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆரம்பகால தளபதிகளிலில் ஒருவரான லெப்.கேணல் ராதாவின் தந்தையாரும் நாட்டுப்பற்றாளருமான திரு சிவகுருநாதன் கனகசபாபதி அவர்கள் காலமானார்.

அமரர் திரு சிவகுருநாதன் கனகசபாபதி அவர்கள் ஆரம்பகாலகட்டத்தில் தமிழீழ விடுதலை புலிகளின் வளர்ச்சிக்கு அயராது பாடுபட்டடு  நாட்டுப்பற்றாளராகவும் , தமிழீழ தேசியத்தலைவரின் நேசத்துக்குரியவராகவும் விளங்கினார்.

 லெப்.கேணல் ராதா

தமிழீழ போராட்ட வரலாற்றை தெரிந்து கொண்டவர்கட்கு ராதாவை தெரியாமல் இருக்க முடியாது. யாழ் இந்துக்கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போதே ஆற்றலும் ஆளுமையும் மிக்க இளைஞனாயிருந்த ஹரிச்சந்திரா தான் 1983ல் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டதும் தலைவரினால் ராதா எனப் பெயரிடப்பட்டு எமது விடுதலைப்பயணத்தில் தளபதி ராதா ஆகினார்.

கல்லூரியில் படிக்கும் காலத்திலும், பின்னரும் தான் ராதா எப்போதும் அழகான ஆடம்பரமற்ற உடைகளை உடுத்தும் பழக்கம் உடையவர். இதனால் யாழ் வீதிகளில் மோட்டார் சைக்கிள்களில் உலா வந்த ராதாவைப் பார்ப்பவர்கட்கு அவர் ஓர் அரச அதிகாரியைப் போலவோ அல்லது மருத்துவரைப் போலவோ தோன்றினாரே அன்றி வேறு விதமான பார்வையைக் கொடுக்கவில்லை.

8ம் வகுப்பில் படிக்கும் போதே சாரணர் இயக்கத்தில் சேர்ந்து கொண்ட ராதா உயர்தர வகுப்பு படிக்கும் வரை சாரணர் இயக்கத்தில் இருந்து கல்லூரியின் பயிற்சிப் பாசறைக்கே தலைவனாக இருந்ததினால் கல்லூரிக் காலத்தில் இருந்தே அவரிடம் நிர்வாக ஒழுங்குகளும் கட்டுப்பாடுகளும் நிறைந்து காணப்பட்டன.

யாழ் இந்துக்கல்லூரியில் மாணவ தலைவர்கட்கு முதன்மை மாணவத் தலைவனாக இருந்த ராதா வகுப்பறைகளின் நடைபாதைகளில் நடந்து வந்தாலே மாணவர்கள் அதிபரைக் கண்டதுபோல் அமைதியாகி விடுவார்கள்.

கல்வி, விளையாட்டு, நிர்வாகம் என்று எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்கிய ராதா தனது கல்லூரி வாழ்வை முடித்துக்கொண்டு கொழும்பில் வங்கியொன்றில் பணிபுரிந்தார்.
தொடர்புடைய பதிவு

இந்நிலையில் 1983ல் நடைபெற்ற இனப்படுகொலைகளை கண்களினால் கண்ட ஹரிச்சந்திரா உடனடியாகத் தன்னை விடுதலைப்புலிகள் இயக்கத்தோடு இணைத்துக்கொண்டார்.

அறிவும், ஆற்றலும், வீரமும், விவேகமும் ஒருங்கே கொண்ட ஒரு வித்தகனை விடுதலைப்புலிகள் இயக்கம் பெற்றுக்கொண்டது. இந்த வித்தியாசமான வீரனை, நடமாடும் பல்கலைக்கழகத்தினை இனங் கண்டுகொண்ட தேசியத்;தலைவர், ராதாவின் ஆற்றலும், ஆளுமையும் அவரைப் போல பல நூறு போராளிகளை உருவாக்கும் என்பதை உணர்ந்து கொண்டு பயிற்சி முகாமினை நடாத்தும் பணியினை ராதாவிடம் ஒப்படைத்தார்.

தமிழ், ஆங்கிலம், சிங்களம் என்று மூன்று மொழிகளையும் அறிந்திருந்த ராதாவின் மேசையில் புத்தகங்களும் குவிந்திருக்கும். அவர் தெரிந்து வைத்திருக்காத துறையே இல்லை என்று துணிந்து கூறலாம். .

இவ்வாறு எண்ணற்ற திறமைகளைக் கொண்டிருந்த ராதா தலைவரின் நேரடிக் கண்காணிப்பில் நடைபெற்ற விசேட கொமாண்டோ அணியிற்கும் பயிற்சி அளித்தார். பயிற்சியாளனாக இருந்த ராதா லெப்.கேணல் விக்டருடன் மன்னார்க் களம் நோக்கிச் சென்று சாதனைகள் செய்யத் தொடங்கினான். மன்னார் பொலிஸ் நிலையத் தாக்குதலில் ராதாவின் திறமையை விக்டர் பல இடங்களிலும் குறிப்பிடுவது வழக்கம்.

விக்டர் இறந்த பின் மன்னார்ப் பிரதேசத் தளபதியாகப் பொறுப்பேற்ற ராதா உலகில் கண்ணிவெடியால் தகர்க்கப்படாதென புகழ்பட்ட “பவலோ” கவச வாகனத்தைத் தகர்த்து விடுதலைப்புலிகளின் தொழில்நுட்பத் திறனை உலகிற்குக் காட்டினார்.

20-05-1987ல் அவரைத் தேடி எதிரி ஏவிய குண்டொன்று அவரது மார்பினைத் துளைத்தது. ஹரிச்சந்திரா என்ற ராதா காவியமாகி ஆண்டுகள பல தாண்டிய போதும் அவரது பசிய நினைவுகள் எம் மண்ணில் இருக்கும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.