தீர்வு தராது தமிழர்களை ஏமாற்ற முடியாது அரசு!

தீர்வு கொண்டு வரப்­ப­டா­விட்­டால் அத­னால் ஏற்­ப­டும் விளை­வு­கள் பற்­றிப் பெரும்­பான்­மை­யி­னர் சிந்­திக்க வேண்­டும். பன்­னாட்­டுச் சமூ­கம் எமக்­குச் சில உறு­தி­மொ­ழி­க­ளைத் தந்­துள்­ளது. இந்த விட­யத்­தில் பன்­னா­டு­கள் ஏதோ ஒன்­றைச் செய்தே ஆக வேண்­டும். எம்­மி­டம் இரா­ஜ­தந்­தி­ரம் உண்டு. இத்­தனை காலம் பொறு­மை­யாக இருந்த நாம் இன்­ன­மும் சற்­றுப் பொறுமை காக்க வேண்­டும்.


இவ்­வாறு தெரி­வித்­துள்­ளார் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஈ.சர­வ­ண­ப­வன்.

தீவ­கம், குறி­காட்­டு­வா­னில் நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்ற சர்வ மதப் பொங்­கல் நிகழ்­வில் முதன்மை விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.
அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது-:

முடி­யும், முடி­யாது – வரும், வராது என்று தற்­போது ஒரு விட­யம் சர்ச்­சைக்­குள்­ளாக்­கப்­பட்டு வரு­கின்­றது. நாம் நல்­ல­தையே எதிர்­பார்க்­கின்­றோம். எம்மை விமர்­சிப்­ப­வர்­கள் நடக்க முடி­யா­த­வற்­றைக் கூறு­கின்­ற­னர்.
பெரும்­பான்­மை­யி­னர் எமக்கு ஒரு தீர்வை வழங்­கத் தவ­று­வார்­க­ளா­னால், தமி­ழர்­க­ளுக்­கான உரி­மையை வழங்க மறுத்­தால் மாற்று நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ள­லாம். பன்­னாட்­டுச் சமூ­கம் எமக்­குச் சில உறு­தி­மொ­ழி­க­ளைத் தந்­துள்­ளது.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புச் சரி­யான பாதை­யில்­தான் செல்­கின்­றது. எம்­மி­டம் இரா­ஜ­தந்­தி­ரம் உண்டு. நேரம் வரும்­போதே சில­வற்­றைச் செய்ய முடி­யும்.

புதிய அர­ச­மைப்­புக்கு மகா­நா­யக்­கர்­க­ளும் எதிர்ப்­புத் தெரி­விக்­கின்­ற­னர். எதிர்­வ­ரும் நாள்­க­ளில் பல சிக்­கல்­கள் ஏற்­ப­டும் என்று எதிர்­பார்க்­க­லாம். ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யும் அர­ச­மைப்பு முயற்­சி­க­ளில் இருந்து பின்­வாங்­கு­கின்­றது போன்று தென்­ப­டு­கின்­றது. எதிர்­வ­ரும் பெப்­ர­வரி 4ஆம் திகதி புதிய அர­ச­மைப்பு நாடா­ளு­மன்­றத்­துக்கு வருமா என்­ப­தில் கேள்வி எழுந்­துள்­ளது.
என்­னால் இயன்­ற­வற்றை இந்­தப் பிர­தே­சத்­துக்­குச் செய்­வேன்.

கடந்த ஆண்டு எனக்கு ஒதுக்­கப்­பட்ட நிதி­யில் 10 இலட்­சம் ரூபா­வைத் தீவ­கத்­தில் உள்ள விளை­யாட்­டுக் கழ­கங்­க­ளுக்கு ஒதுக்­கி­னேன். ஆனால் அர­சி­யல் குழப்­பங்­களால் அவற்­றுக்கு என்ன நடந்­தது என்று தெரி­யாது போய்­விட்­டது. திட்­ட­மி­டல் அமைச்­சி­டம் கதைக்­க­வுள்­ளேன். அந்த நிதி மீளக் கிடைத்­தால் தரு­வேன். 2019ஆம் ஆண்­டுக்­கான நிதி ஒதுக்­கீட்­டில் நான் ஒரு மில்­லி­யன் ரூபாவை ஒதுக்­கு­வேன். திட்­டங்­களை நீங்­கள் தயா­ரித்­துத் தாருங்­கள். அந்­தத் திட்­டங்­கள் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டால் நிதியை ஒதுக்­கு­கின்­றேன்.

நாம் அபி­வி­ருத்­தி­யில் பின்­தங்கி நிற்­கின்­றோம். அபி­வி­ருத்­திக்கு எனப்பணம் வந்­தது. ஆனால் அபி­வி­ருத்தி செய்­யப்­ப­ட­வில்லை. முன்­னாள் ஆட்­சி­யா­ளர்­கள் எங்கு அபி­வி­ருத்­தியை மேற்­கொண்­டார்­கள் என்று தெரி­ய­வில்லை. திட்­டங்­களை சரி­யாக வகுத்து அபி­வி­ருத்­தி­யில் இறங்­கு­வோம். அதற்கு நான் பக்­க­ப­ல­மாக நிற்­பேன்  என்­றார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.