ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு எதிராக செயற்பட மாட்டேன்

அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கினாலும் ஶ்ரீலங்கா சுதந்திர
கட்சியில் இருந்து தான் விலகவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்ஸா தெரிவித்துள்ளார்.

தான் எந்த சந்தர்ப்பத்திலும் கட்சிக்கோ அல்லது கட்சியின் தலைமைத்துவத்திற்கோ எதிராக இருப்பதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

கண்டி தளதா மாளிகையில் வழிபாடுகளை முடித்துவிட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.