கடந்த ஆண்டின் தவறுகளை திருத்தி புத்தாண்டில் சேவையாற்றுவோம்

2018ஆம் ஆண்டின் தவறுகளை திருத்தி புத்தாண்டில் சேவையாற்றவுள்ளதாக
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற புத்தாண்டு நிகழ்வுகளில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மலர்ந்திருக்கும் 2019ஆம் ஆண்டை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் அமைச்சர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
தொடர்ந்து கடந்த ஆண்டின் தவறுகளை திருத்தி அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றவுள்ளதாக தெரிவித்த அமைச்சர், அதற்கு அனைவரதும் ஒத்துழைப்பை கோரியுள்ளார்.

No comments

Powered by Blogger.