சாவுவீடுகளில் அரசியல் செய்யும் ஈபிடிபியும்.

வட்டுக்கோட்டை மேற்கு, வடக்கு பகுதியின் போஸ்ட் மாஸ்டர் என அனைவராலும் அறியப்பட்ட
சமூகசேவகர் அமர்ர் சௌந்தர்ராஜ அவர்கள் அண்மையில் காலமானார், இவர் எமது ஊர்மக்களிக்கு செய்த சேவைகள் அளப்பெரியது. அவரின் துயரால் வாடும் அவர்களது குடும்பத்தவர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல காசிவிஷ்வநாத சிவனின் இறையருளை வேண்டிக்கொள்கின்றோம்.

அத்துடன் இவரது இறுதிக்கிரிகைகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்தில் ஊர்மக்கள் அனைவரும் ஒன்றுகூட நடைபெற்றது. அத்தரனத்தில் தமிழர் துரோகிகளின் தலைவரான ஈபிடிபி  அமைப்பின் டக்கிழஸ் தேவானந்த ஊர்மக்களின் விருப்பத்திற்கு மாறாக வருகைதந்து தனது கட்சியின் துரோகங்களை மறைக்க அரசியல் உள்நோக்கத்துடன் வருகைதந்திருந்தார். கொலைகாரனின் வாயினால் எமது சமூக சேவகர் அவர்களுக்கு புகழாரத்தை எமது ஊர்மக்கள் என்றும் எதிர்பார்ததில்லை. இத்துரோகக்கட்சிக்கு வால்பிடிக்கும்  எம்மவர்கள் எமது ஊருக்கு இத்தகைய துரோகிகளை இறக்குமதி செய்யக்கூடாது என்று கேட்டுக்கொள்கின்றோம்.

சிவன் கோவில் கோபுர கட்டுமானபணிக்காக பலகோடி ஈபிடிபி ஒதுக்க முற்பட்டபோது அதனை கடுமையான எதிர்த்தவர் அமரர் சௌந்தர்ராஜ அவர்கள். அப்படிப்பட்ட மனிதருக்கு இத்தகைய துரோகிகளின் அனுதாபங்கள் தேவையற்றதாகவே எமது ஊர்மக்கள் கருதுகின்றனர்.

எமது ஊர்மக்களின் அபிலாசைகளுக்கு மாறாக துரோக்கட்சியில் தொடரும் எம்மவர்கள் உங்கள் அரசியலை ஊருக்கு வெளியில் வைக்க வேண்டுமென உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றியுடன்
நல்லை தயா
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

No comments

Powered by Blogger.