மூடப்­பட்ட சுதந்திரக் கட்சி அலு­வ­ல­கம் -நாளை திறக்­கப்­ப­டும்

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வின் உத்­த­ரவை அடுத்து, மூடப்­பட்ட சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் தலை­மை­ய­கம், நாளை மீண்­டும் திறக்­கப் படும் என்று, அந்­தக் கட்­சி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மகிந்த அம­ர­வீர தெரி­வித்­துள்­ளார்.

‘அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வின் உத்­த­ர­வுக்கு அமை­வாக கடந்த 26ஆம் திகதி சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் தலை­மை­ய­கம் மூடப்­பட்­டது. தாம் தாய்­லாந்­தில் இருந்து திரும்­பும் வரை, கட்­சித் தலை­மை­ய­கத்தை மூடு­மா­றும் அவர் உத்­த­ர­விட்­டி­ருந்­தார். அரச தலை­வர் நாடு திரும்­பி­யுள்ள நிலை­யில், கட்­சி­யின் தலை­மை­ய­கம் நாளை மீண்­டும் திறக்­கப்­ப­டும்.’ என்­றும் அவர் தெரி­வித்­தார்.
அதே­வேளை, சுதந்­தி­ரக் கட்சி தலை­மை­ய­கத்­தின் சாவி­கள், மரு­தானை பொலிஸ் நிலை­யத்­தில் கடந்த 26ஆம் திகதி ஒப்­ப­டைக்­கப்­பட்­டி­ருந்­தன.
இந்­தச் சாவி­கள் மறு­நாள் பிற்­ப­கல் 3.15 மணி­ய­ள­வில், சுதந்­தி­ரக் கட்சி பிர­தி­நி­தி­க­ளால் பொறுப்­பேற்­கப்­பட்­ட­தாக, பொலிஸ் ஊட­கப் பிரிவு அறி­வித்­துள்­ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.