தமிழீழத்துக்கான பயணத்தை விடவில்லை கூட்டமைப்பு

தமி­ழீ­ழத்தை உரு­வாக்­கும் பய­ணத்­தைத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு இது­வரை கைவி­ட­வில்லை. அத­னா­லேயே மகிந்த ராஜ­பக்­ச­வின் எதிர்­கட்­சிப் பத­வி­யை­யும் சவா­லுக்­குட்­ப­டுத்­து­கின்­றது.

இவ்­வாறு சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் திலங்க சும­தி­பால தெரி­வித்­துள்­ளார்.
கொழும்­பில் நடத்­தப்­பட்ட ஊடக சந்­திப்­பில் கருத்­துத் தெரி­வித்­த­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்­ளார்.
அவர் தெரி­வித்­த­தா­வது:
முன்­னான அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்­சவை எதிர்க்­கட்­சித் தலை­வ­ராக நிய­மிப்­பதே எமது கட்­சி­யின் இறு­தித் தீர்­மா­ன­மாக இருந்­தது. சபா­நா­ய­க­ரும் அதை ஏற்­றுக்­கொண்டு செயற்­ப­டு­கின்­றார்.
தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு முன்­னெ­டுக்­கும் நகர்­வு­க­ளின் இலக்கு மகிந்த ராஜ­பக்ச நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரா­க­வும், எதிர்க் கட்­சித் தலை­வ­ரா­க­வும், தலைமை அமைச்­ச­ரா­க­வும் தொடர்­வ­தைத் தடுப்­பதே. மகிந்த ராஜ­பக்ச மக்­கள் மத்­தி­யில் எழுச்­சி­ய­டை­வதை ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் ஆத­ர­வைப் பெற்­றுத் தடுக்க முயற்­சிக்­கின்­ற­னர்.
இவற்­றின் பின்­பு­லம் பிரி­வி­னை­வா­தம் அல்­லது தமி­ழீ­ழத்தை அமைக்­கும் பய­ணத்­தைத் தமிழ்க் கூட்­ட­மைப்­புக் கைவி­ட­வில்லை என்­பதே. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பைச் சேர்ந்த 16 பேரே நாடா­ளு­மன்­றில் உள்­ள­னர். ஆனால் எதிர்­கட்­சித் தலை­வர் பத­வி­யைக் கோரு­கின்­ற­னர். யார் எமது தலை­வர் என்று நாம் தீர்­மா­னிப்­ப­தைச் சவா­லுக்­குட்­ப­டுத்த அவர்­க­ளுக்கு எந்த அதி­கா­ர­மும் இல்லை.- என்­றார்.

No comments

Powered by Blogger.