வெள்ள அனர்த்தமும் மக்களும் அரச அதிகாரிகளும் பாகம்2

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் எல்லா இடங்களிலும் மழை பொழிவதாக களத்தில் இருந்து செய்து வந்துகொண்டு இருக்கும் போது குறித்த இடத்தில் மழை யா என்று கேட்கும் நபர்களை கடக்கும் பொழுதில் கோபம் வருகின்றது.


ஈழத்தில் வாழும் எம்மவர்களின் உண்மை நிலவரத்தை இங்கே நான் குறிப்பிட்டே தீர வேண்டும்...

1)கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் வாழும் மக்களில் 80 வீதமான மக்கள் நடுத்தர வர்க்க அல்லது வறுமைக்கோட்டுக்குள் வாழும் மக்களே.

2) அந்த மக்களில் சிமாட் போன் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 15 வீதமே.

3)அதிலும் அந்த போன்களை டேட்டா போட்டு எப்போதும் ஒன் இல் வைத்திருக்கும் மக்களின் அளவு 5 வீதமே.

4)அது மட்டுமன்றி தொலைபேசிகளின் சிக்னல் வீதம் என்று நாம் கவனித்தால் 3 வீதமான மக்களே சிறந்த சிக்னல் உள்ள பகுதிகளில் வாழ்கின்றனர்..

5) அதுமட்டுமன்றி கடும்மழை பொழியும் போது தொலைபேசியினை எடுத்து பயன்படுத்தக்கூடிய நிலையில் இருப்பவர்கள் 1 வீதமான மக்களே.
இவர்களால் ஒவ்வொரு செய்தியினையும் உடனுக்குடன் எம்முடன் பகிர்ந்து கொள்ள முடியாது. ///

1) வீட்டுத் தொலைபேசி, கைத்தொலைபேசி என்ற வசதியுடன் உள்ளவர்கள் வெளிநாட்டில் மகனையோ, மகளையோ கொண்டவர்களாக இருப்பவர்களாக அல்லது அரசாங்கத்தின், தனியார் திணைக்களங்களில் கணவனும் மனைவியும் தொழில் செய்வதுடன் மாதாந்தம் 100000 அதிகமாக சம்பளத்தை பெறுபவர்கள் மட்டுமே.

2) இந்த மனிதர்களுக்கு சமூக வெளியில் நடக்கும் விடயத்தை பற்றி கவலைப்படும் எண்ணிக்கை மிகவும் குறைவானதாகவே இருக்கின்றது. (அதற்காக ஒட்டுமொத்தமாக அனைவரும் அப்படி என்று நான் குறை கூறவில்லை கவனிக்க)

3)அது தவிர சமூக சேவை செய்கின்றோம் என்ற போர்வையில் புலம்பெயர் நாடுகளில் கொழுத்த சமூக கட்டமைப்புகளை உருவாக்கி அதில் அதிகளவான பணத்தை பெற்று, அள்ளி எடுக்கும் பணத்தில் கிள்ளிக்கொடுத்து தாம் சமூக சேவை செய்வதாக மார்தட்டும் சில சமூக அமைப்புக்கள்.இவர்களும் நாட்டில் உள்ள நிலைகளை ஆழமாக அலசி ஆராய்வதில்லை .

இப்படியான சூழலே எமது ஈழத்தில் நடந்துகொண்டு இருக்கின்றது...

இப்போதும் கூட நிவாரணத்திற்காக கொடுக்கப்படும் பொருட்களின் பங்கீடுகளில் குறைகள் இருப்பதனை நாம் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. இதற்கு ஒட்டுமொத்தமாக அரசாங்க அதிகாரிகளை நாம் குற்றம் சுமத்திட முடியாது. குறித்த பிரதேசங்களில் உள்ள கிராம சேவை அதிகாரிகள் அனுபவம் குறைந்தவர்களாக இருப்பதுடன் மக்களை எவ்வாறு வழிநடத்த வேண்டும் என்ற அறிவற்றவர்களாகவும் காணப்படுகின்றனர்.

ஒரு பிரதேத்திற்கு அல்லது மக்கள் தங்கியிருக்கும் முகாம்களுக்கு உணவுகள் அடிப்படை நிவாரண பொருட்கள் அனுப்பிவைக்கப்படும் பொழுது அந்த முகாமில் உள்ள அனைவருக்கும் சம அளவில் அந்தப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்படுகின்றது.இது வெளிப்பார்வைக்கு சரியானதாக தோற்றம் அளித்தாலும் மிக கூடுதலான இழப்பை கொண்ட குடும்பத்திற்கும் சாதாரண அளவிலான இழப்பை கொண்ட குடும்பத்திற்கும் ஒரே அளவிலான நிவாரணம் வழங்குவதால் நிவாரணம் வழங்கியதற்கான உண்மையான நோக்கம் நிறைவேறாத நிலை காணப்படுகின்றது.
இதனை சுட்டிக்காட்டும் சில சமூக அமைப்புகளை திட்டும் நிலையும் காணப்படுகின்றது..''நீங்கள் இப்போது வந்து நிவாரணங்களை கொடுத்துவிட்டு போய்விடுவீர்கள், நாம் தானே இங்கே தொடர்ந்து பணியாற்ற வேண்டும்'' என்று தமது இயலாமையை சில அரச அதிகாரிகள் வெளிப்படுத்துவதையும் காண முடிகின்றது...

யாரை சொல்லி நோவது...மக்களே மக்களாக சில விடயங்களை புரிந்துகொள்ளாத வரையிலும் நாம் யாரையும் மாற்றிட முடியாது ...ஆனாலும் மக்களுக்கான சில விழிப்புணர்வுகளை வழங்க வேண்டியது ஒவ்வொருவரினதும் கடமையாகும் ...

அன்புடன்
நிலா

No comments

Powered by Blogger.