தமிழர் தாயகப்பகுதியில் மிக மோசமாக படுகொலை செய்யப்பட்ட மாணவசமூக துயரம்!

தமிழர் தாயகப்பகுதியில் மிக மோசமாக படுகொலை செய்யப்பட்ட மாணவசமூக துயரச்செய்தியை சுமந்து கொண்டே, இன்னமும் நாம் நல்லாட்சியின்
நயவஞ்சக நிழலில் எதிர்க்கட்சி ஆசன பெருமையில் வாழ்கின்றோம் என்பது எவ்வளவு கேவலமானது என்பதை பகுத்தறிய யாருமில்லையோ!

02.01.2006 இல் தமிழ் தாயக தலைநகரின் கடற்கரையில் பொழுதை கழித்து கொண்டிருந்த அப்பாவி தமிழ் மாணவர்களை சிங்கள பௌத்த அரசு, அதாவது சாணக்கியரின் நல்லாட்சி அரசு படுகொலை செய்தது. இதற்கு ஏதாவது நீதி வாங்கி தரமுடிந்ததா? அல்லது எந்த நீதிமன்றிலாவது வழக்கை தொடர்ந்து வாதாடினார்களா? இல்லையே!

அப்பாவி மாணவர்களின் படுகொலை இரத்த வாடை தீருமுன்னே! நல்லாட்சி மகுடி ஊதிய பாம்பாட்டி சம்பந்தர் இன்னமும் பகுத்தறிவு தமிழிரிடையே நற்பெயரோடு வாழ்கின்றார். பிள்ளைகளை பறிகொடுத்த பெற்றோர் அச்சுறுத்தப்பட்டு, நாடுகடத்தப்பட்டனர்.

இன்னமும் சம்பந்தரே வேண்டுமென வாதிடும்
தமிழர்களே! இம்மாணவ செல்வங்களுக்கான நீதி ஏன் மறுக்கப்பட்டு மறைக்கப்பட்டது என கூறமுடியுமா?

சாணக்கியரின் அரசியியல் லாபத்துக்காக இன்னமும் பலியிடல் நடக்கும், நீங்களே நடத்தி அவரை வணங்கி வாழுங்கள் தமிழினம் உருப்படும்.
எம் மாணவர்களுக்கான நீதி மறுக்கப்பட்டும் நாம்
சிங்களதேச அரசை நம்புவது எத்தகைய அடி முட்டாள்தனம் என்பதை எப்போது தமிழராகிய நாம் உணரப்போகிறோம்.

படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் விபரங்கள்:

மனோகரன் ரஜீகர் (பி. 22.09.1985, அகவை 21)

யோகராஜா ஹேமச்சந்திரா (பி. 04.03.1985, அகவை 21)

லோகிதராஜா ரோகன் (பி. 07.04.1985, அகவை 21)

தங்கதுரை சிவானந்தா (பி. 06.04.1985, அகவை 21)

சண்முகராஜா கஜேந்திரன் (பி. 16.09.1985, அகவை 21)

இவர்கள் என்ன ஆயுதம் ஏந்தி போராடிய போராளிகளா?

அநியாயமாக ஆவி துடிதுடிக்க படுகொலை செய்யப்பட்ட என் தம்பிகளின் புனித ஆன்மா அமைதி கொள்ள விழிநீர் அஞ்சலிகள்
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

No comments

Powered by Blogger.