பாதுகாப்பு விடயத்தில் சமரசத்திற்கு இடமில்லை: சீனாவிற்கு கனடா பதிலடி


சீனாவின் எச்சரிக்கையை நிராகரித்த கனேடிய அரசாங்கம், தமது பாதுகாப்பு தொடர்பான எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை எனக் குறிப்பிட்டுள்ளது. ஹூவாவி நிறுவனத்தினால் விநியோகிக்கப்படும் தொழில்நுட்பங்களை தடைசெய்தால் கனடா பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என சீனா எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், இது தொடர்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) பதிலளித்த பொதுத்துறை பாதுகாப்பு அமைச்சர் ரால்ப் குட்டேல் (Ralph Goodale) இதனை தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பிற்கு பங்கம் ஏற்படுவதை அனுமதிக்க முடியாது என ஒட்டாவா ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது. கனடாவிற்கு எது சரியானது என்ற அடிப்படையிலேயே எமது தீர்மானங்கள் அமையும். சரியான முடிவுகளை எடுப்பதை யாராலும் தடுக்க முடியாது எனத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.