எனது நோக்கம் கூட்டமைப்பை உடைப்பதல்ல!

எந்தக் கட்சிகளையும் பிளவு படுத்துவது எமது நோக்கமல்ல. தமிழ்த் தேசியக் கூட்ட்டமைப்பினை உடைக்க நான் கட்சி தொடங்கவில்லை.
தமிழ் அரசுக் கடசிக்கு தொந்தரவு கொடுக்காதே நான் செயற்பட்டு வருகின்றேன் என்று வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

நல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழுக் கூட்டம் நேற்று இடம்பெற்றது.அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் கூட்ட்டணியில் ஜனநாயகம் எப்போதும் இருக்கும் எனது கட்சியில் உள்ளவர்கள், கட்சியின் செயலாளர் ஆகிய என்னை கட்சியில் இருந்து விலகுமாறு கேட்டால் கூட நான் கட்சியை விட்டு சென்று விடுவேன் என்று தெரிவித்த விக்னேஸ்வரன்நிர்வாக உறுப்பினர்களை நான்தான் நியமித்துள்ளேன். என்னை வேண்டாம் என்றால் கூட நான் கட்சியை விட்டுச் செல்வேன்.அந்தளவுக்கு ஜனநாயக யாப்பினையே நாம் தயாரித்துள்ளோம். நாங்கள் கொள்கை ரீதியாகச் செல்பவர்கள் எம்முடன் சேர வருபவர்கள வந்தால் அவர்களை அடையாளம் கண்டு சேர்த்துக் கொள்வோம். தமிழ் மக்கள் பேரவையில் உள்ள பலர் எமது ஆலோசனைக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர். ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக உள்ளவர்கள் எந்தக் காலத்திலும் தேர்தலில் போட்டியிட மாடடார்கள். ஆனால் செயலாளர் ஆகிய நான் மட்டும் தேர்தலில் போட்டியிடுவேன். தமிழ்த் தேசியக் கூட்ட்டமைப்பினை உடைக்க வேண்டிய அவசியமில்லை. கூட்டமைப்பின் கொள்கைகள் என்ன என கூறினால் அவர்களுக்கு மக்கள் தொடர்ந்தும் ஆதரவு கொடுப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.