தனிமனித வழிபாடு ஆபத்தானது
என்னை நம்புங்கள், நான் வாங்கித் தருவேன், எனக்கு நம்பிக்கை உள்ளது. எனது கணிப்பை மட்டுமே சொன்னேன் என்று தமிழ் மக்களுக்கும் நான் உங்களை நம்புகிறேன், இப்பொழுது கருமங்கள் நடைபெறுகிறது, என்று சிங்கள மக்களுக்கும் தெரிவிப்பதன் மூலம் தன்னை மட்டுமே மையப்படுத்தியதாக அரசியல் செல்நெறி இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் திரு.சம்பந்தன் செயற்பட்டிருப்பதை உணர முடிகிறது. இது அவர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்த வரையிலான சூழல்.
கண்ணுக்குப் புலப்படக்கூடிய மற்றும் மறைமுக நிகழ்ச்சி நிரலுடன் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையை முன்னாள் ஜனாதிபதி மகிந்தவும் இன்றைய ஜனாதிபதி மைத்திரியும் முன்னின்று அரங்கேற்றினர்.
எந்த மைத்திரியை பொதுவேட்பாளராகக் களமிறக்கி, அவரின் மூலம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் தமிழ் மக்களின் ஆதவைப் பெற்றுக்கொடுத்தாரோ அந்த மைத்திரியே முன்னின்று தானே உருவாக்கிய நல்லாட்சி என்று பறைசாற்றிய ஐ.தே.க. மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டணி அரசாங்கத்தை ஆட்டங்காணச் செய்திருந்தார்.
மைத்திரியின் இந்நடவடிக்கை அரசியல் அமைப்பையே கேள்விக்குள்ளாக்கி நீதிமன்றத்தின் மூலம் அவரது செயற்பாடு தவறானது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்நடவடிக்கையிலும், அதனைத் தொடர்ந்து ரணிலின் தலைமையில் ஐ.தே;கயின் தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தை அமைப்பதிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னின்று செயற்பட்டிருந்தது. ஐக்கிய தேசியக் கட்சியை அரியணையில் ஏற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழந்துள்ளது.
இதன் மூலம் இதுவரை காலமும் தமிழரசுக் கட்சி அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரைப் பயன்படுத்தி தமிழ் மக்கள் மத்தியில் முதல்நிலை அரசியல் செய்துவந்த திரு சம்பந்தனிடமிருந்து இந்தக் கருமங்களை முன்னின்று சட்டரீதியாக அணுகிய சுமந்திரனின் கைகளுக்கு மாறியுள்ளது. இந்த மாற்றம் தமிழ் மக்களுக்கு சாதகமா? பாதகமா?
தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைப் போராட்டத்தில் எத்தகைய பங்களிப்பையும் செலுத்தாத அல்லது குறைந்தபட்சம் அதன்மீது எந்தவித அக்கறையையும் கொண்டிராத ஒருவர், ஆயுதப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்டதன் பின்னர், அரசியல் சாசனத்திலும் சட்டத்துறையிலும் நிபுணத்துவம் பெற்றவர் என்று திரு.சுமந்திரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு.சம்பந்தன் அறிமுகம் செய்தார்.
இதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் நிலவிய சட்டத்தரணிக்கான பற்றாக்குறையை இட்டு நிரப்புவதற்காகவே திரு.சுமந்திரன் அரசியலுக்குள் உள்வாங்கப்பட்டவர் என்பதும் அதற்கான சன்மானமாகவே அன்று அவருக்கு தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது என்பதும் நிரூபணமாகிறது.
அவரது சட்ட அறிவு பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்குப் பயன்பட்டதைவிட, ஆளும் வர்க்கங்களுக்கு அதிகம் பயன்பட்டது அல்லது அவ்வாறு பயன்படத்தக்க வகையில் பார்த்துக்கொள்ளப்பட்டது. சட்டரீதியாக அணுக வேண்டிய விடயங்களை அரசியல்ரீதியாகவும், அரசியல் ரீதியில் அணுக வேண்டிய விடயங்களை சட்டரீதியிலும் அணுகி விடயங்களைக் குழப்பி, அரசாங்கத்தின் கால விரயத்திற்கு பல வழிகளிலும் துணை நின்றார்.
மகிந்தவின் ஆட்சிக் காலத்தில் மக்களின் போராட்டங்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு, 2012ஆம் ஆண்டிற்குப் பின்னர், மெல்ல மெல்ல தனது காய்நகர்த்தல்களை ஆரம்பித்து, சர்வதேச நெருக்கடிகளிலிருந்து சிங்கள பௌத்த பேரினவாத சக்திகளைக் காப்பாற்றும் செயற்பாடுகளில் தன்னையும் ஆளும் வர்க்கத்தின் பிரதிநியாக இணைத்துக்கொண்டு செயற்பட்டு வருவதை தமிழ்த் தேசியத்தின் மீது உண்மையான பற்றுள்ளவர்களும் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை உணர்ந்திருப்பவர்களும் புரிந்திருப்பார்கள்.
உள்நாட்டு, சர்வதேச ஆளும் வர்க்கங்களின் நலன்களைக் காப்பதற்காக தமிழ் மக்களுக்கு ஏதோ ஒன்று கிடைக்க இருப்பதான தோற்றத்தை ஏற்படுத்தி, அவர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து பின்னர் பிரதான கோரிக்கையிலிருந்து அவர்களை திசை திருப்பி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு எத்தகைய நிவாரணமும் முழுமையாகக் கிடைக்காமல் செய்வதை நோக்கமாகக் கொண்டே அவரது செயற்பாடுகள் அமைந்திருப்பதை இன்று தமிழ் மக்கள் நன்றாகவே புரிந்துகொண்டுள்ளனர்.
ஆளும் வர்க்கத்தின் நலன்களை மையப்படுத்தி கருமங்களை ஆற்றுவதற்காகவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அது உருவாக்கப்பட்டதன் நோக்கத்தின் அடிப்படையில் அங்கம் வகித்த கட்சிகள் முதலில் அகற்றப்பட்டன அல்லது வெளியேறுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டன.
தமிழீழத்தை இன்றளவும் கட்சிப் பெயராகக் கொண்டுள்ள முன்னாள் ஆயுதப் போராட்ட அமைப்புகள் தாம் போராட்டத்தில் ஈடுபட்டதற்கான காரணத்தை மறந்ததன் காரணமாகவே இன்று தமிழரசுக் கட்சியின் தயவில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால் அவை கூட்டமைப்பில் இணையாவிட்டால் தேர்தல்களில் தோல்விகளை மட்டுமே சந்திக்க நேரிடும் என்று போலியான பிரச்சாரம் மேற்கொள்கின்றன. இவர்கள் கூட்டமைப்பில் இருப்பதும் இல்லாதிருப்பதும் சுமந்திரனுக்கு ஒரு பொருட்டே அல்ல.
சுயமாக சிந்திப்பவர்களும், மக்கள் நலனில் அக்கறை உடையவர்களும் கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டனர்.
இதில் வடக்கு மாகாணசபையின் முன்னாள் முதல்வர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரனும் அடக்கம். தத்தமது அரசியல் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள விரும்புபவர்கள் மட்டுமே இன்று கூட்டமைப்பில் உள்ளனர்.
இத்தகைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலேயே இன்று பாராளுமன்றத்தில் பதினான்கு உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால் கூட்டமைப்பின் அரசியல் செல்வாக்கு நாளுக்குநாள் நலிவடைந்து வருகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்து, அதன் தலைவர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழந்துவிட்ட நிலையில், அனைத்தையும் நலிவடையச் செய்துவிட்ட வெற்றிக்களிப்புடன் திருவாளர் சுமந்திரன் தன்னை மையப்படுத்திய அரசியல் நடவடிக்கைகளில் முனைப்புடன் செயற்பட்டு வருவதை மிகவும் கவனமாக அவதானிக்க வேண்டியுள்ளது.
தமிழ் மக்கள் மத்தியிலும், சிங்கள மக்கள் மத்தியிலும் இந்நாட்டின் அரசியல் நகர்வுகளைத் தீர்மானிக்கும் சக்தி தானே என்பதை முன்னிலைப் படுத்தியதாகவே அவரது அண்மைய செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன.
தென்னிலங்கை அரசியல் சக்திகள் சுமந்திரனே அரசாங்கத்தை நடத்துகிறார். ஐக்கிய தேசியக் கட்சியை வழிநடத்துபவரும் அவரே என்றும் இதனால் புதிய அரசியல் யாப்பு நாட்டைப் பிளவுபடுத்திவிடும் என்றும் கூறுகிறது.
ஆனால் அரசியல் நிர்ணய சபை வழிடத்தல்குழுவினால் அண்மையில் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கை கூட தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய வகையில் அமையவில்லை என்பதே அரசியல் விஞ்ஞானிகளின் கருத்தாக உள்ளது.
தமிழ் மக்களின் உணர்வுகளையும், தமிழ்த் தேசிய இனத்தின் போராட்ட வரலாற்றையும் அறியாத ஒருவர், அல்லது அதனை அறிவதில்கூட ஆர்வமற்ற ஒருவர், தேசிய இனப் பிரச்சினையைத் தீர்ப்பதில் மும்முரமாகச் செயற்படுவார் என்று எதிர்பார்க்க முடியாது.
அரசியலிலிருந்து விலக்கி வைக்க வேண்டிய ஒருவர், இன்று தனது கட்சியின் தலைவரை, கூட்டமைப்பின் தலைவரை, அங்கத்துவக் கட்சிகளின் தலைவர்களை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு அனைவரையும் அரசியல் நீக்கம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு தனது கைகளில் தமிழ்த் தேசிய இனத்தின் அரசியலை எடுத்துக்கொண்டு தனது ஆளும் வர்க்க நலன்சார்ந்த அரசியலை முன்னெடுக்க நினைக்கின்றார்.
இதற்காகவே நாளாந்தம் தனது பெயர் தமிழ் சிங்கள ஊடகங்களில் நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் இடம்பெற வேண்டும் என்று விரும்புகிறார். அவரது சீண்டல்களும், விவாதங்களும் இதனை மையப்படுத்தியவையே.
எமது கைகளைக் கொண்டே எமது கண்களைக் கொத்தும் ஆளும் வர்க்கத்தின் காய்நகர்த்தலில் ஓர் அம்சம்தான் சுமந்திரன் போன்றவர்கள். தமது எஜமானன்களுக்கு விசுவாசமாக இருப்பதற்காக இவர்கள் யாரையும் பலிகொடுப்பார்கள்.
இவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். இவர்களது தரகு அரசியலுக்கு முடிவுகட்டி உரிமை அரசியலுக்கு உயிர்கொடுக்க வேண்டியதன் அவசியத்தை உணரவேண்டியது ஒவ்வொரு தமிழ் மக்களினதும் கடமை.
அந்தக் கடமையை நிறைவேற்றுவதற்கு இந்த ஆபத்தை உணர்ந்தவர்கள் ஓரணியில் திரள வேண்டியது காலத்தின் கட்டாயம். உங்களில் யார் புனிதமானவர்கள் என்பது இப்பொழுது முக்கியமல்ல. எமது மக்களுக்கு எது நல்லது என்பதே முக்கியம். தமிழ் மக்கள் ஒவ்வொருவர் மீதும் நம்பிக்கை வைத்து வைத்து ஏமாந்துபோயுள்ளனர்.
அவர்களின் மனங்கள் காயங்களால் நிரம்பியுள்ளன. எனவே உங்களால் தீர்வைப் பெறுவதற்கு தலைமை கொடுக்க முடியாவிட்டாலும், தமிழ்த் தேசிய இனத்தின் பிரச்சினை இன்னமும் தீர்க்கப்படவில்லை என்பதைச் சொல்வதற்காகவாவது ஓரணியில் அணிதிரளுங்கள்.
விபத்தின் மூலம் அரசியலுக்குள் நுழைந்தவரை அல்லது அரசியிலில் ஒரு விபத்தாக நுழைத்தவரை வைத்து ஆளும் வர்க்கங்கள் தமது காய்களைக் கச்சிதமாக நகர்த்துகின்றன. இதிலிருந்து எமது மக்களைக் காப்பாற்றும் பொறுப்பு எமது அனைவருக்கும் உள்ளது.
தமிழரசுக் கட்சியில் உள்ள உண்மையான தமிழ்த் தேசியவாதிகளும், இனப்பிரச்சினை நியாயமான முறையில் தீர்க்கப்படவேண்டும் என்பதில் உண்மையான அக்கறை கொண்டுள்ள அரசியல் தலைமைகளும், ஒருவருக்கும் தெரியாமல் எத்தகைய தீர்வையும் பெற்றுக்கொள்ள முடியாது என்பதை உணர்ந்தவர்களும் உரிமைகள் என்பது பின்புறத்தால் இரகசியமாகப் பெற்றுக்கொள்வதல்ல என்பதை ஏற்பவர்களும் தரகு அரசியலை நிராகரித்து உரிமை அரசியலை முன்னெடுத்துச் செல்ல விரும்புபவர்களும் ஓரணியில் திரள்வதற்கான நேரமிது.
ஐக்கிய தேசிய முன்னணியின் அரசாங்கம்தான். ஆனால் எம்முடன் பேசியே முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறுவதானது, மாப்பிள்ளை இவர்தான் அவரது ஆடை என்னுடையது என்னும் திரைப்பட காட்சியையே நினைவுபடுத்துகிறது.
நிறைஞ்சன்

.jpeg
)

கருத்துகள் இல்லை