ரணில் காட்டம்! கிடைத்­துள்ள இறு­திச் சந்­தர்ப்­பத்­தை­யும் உதா­சீ­னப்­ப­டுத்­த ­வேண்­டாம்!!

ஒற்­றை­யாட்சி, ஒரு­மித்த நாடு, கூட்­டாட்சி (சமஷ்டி), தனி நாடு, தமி­ழீ­ழம் என்று உள­று­வதை விடுங்­கள்.
சொற்­க­ளைத் தூக்­கிப் பிடிக்­கா­தீர்­கள். அர்த்­த­முள்ள அதி­கா­ரப் பகிர்­வு­டன் மூவின மக்­க­ளும் நல்­லி­ணக்­கத்­து­டன் வாழும் புதிய அர­ச­மைப்பை நிறை­வேற்­றும் பணியை நாம் முன்­னெ­டுக்­க­வேண்­டும்.

தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்குப் புதிய அர­ச­மைப்­பின் ஊடாக தீர்­வு­காண இறு­திச் சந்­தர்ப்­பம் கிடைத்­துள்­ளது. இதை எவ­ரும் உதா­சீ­னப்­ப­டுத்­தக்­கூ­டாது. இவ்­வாறு தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம ­சிங்க காட்­டத்­து­டன் தெரி­வித்­துள்­ளார்.

‘ஜே.ஆர்., பிரே­ம­தாச வழி­யில் ஒற்­றை­யாட்­சிக்­குள் தீர்வு என்று காலி­யில் நேற்று (நேற்­று­முன்­தி­னம்) கூறி­யுள்­ளீர்­கள். புதிய அர­ச­மைப்­புக்­கான நிபு­ணர் குழு­வின் அறிக்­கை­யில், வழி­காட்­டல் குழு சமர்­ப்பித்­துள்ளஅறிக்­கை­யில் ஒற்­றை­யாட்சி  ஒரு­மித்த நாடு என்று குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

ஐக்­கிய தேசி­யக் கட்சி இந்த அறிக்­கை­க­ளில் தனது நிலைப்­பாட்டை தனி­யா­கச் சமர்ப்­பிக்­க­வில்லை. இந்த நிலை­யில் உங்­க­ளது நிலைப்­பாடு என்ன?’ என்று கொழும்பு ஊட­க­வி­ய­லா­ளர் ஒரு­வர், தலைமை அமைச்­ச­ரி­டம் கேள்வி எழுப்­பி­யி­ருந்­தார். அதற்­குப் பதி­ல­ளிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

ஐக்­கிய தேசிய முன்­னணி, சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி, ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­னணி, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு மற்­றும் மக்­கள் விடு­தலை முன்­னணி (ஜே.வி.பி.) ஆகிய கட்­சி­க­ளின் ஆத­ர­வு­டன் புதிய அர­ச­மைப்பு நிறை­வேற்­றப்­பட்­டால் இந்த நாட்­டுக்கு பன்­னாட்டு அரங்­கில் நற்­பெ­யர் கிடைக்­கும். பன்­னாட்­டுச் சமூ­கம் எந்­த­வித அழுத்­தங்­க­ளை­யும் நாட்­டின் மீது பிர­யோ­கிக்­காது.

இதை ராஜ­பக்ச அணி­யி­னர் உண­ர­வேண்­டும்.புதிய அர­ச­மைப்­புக்­கான நிபு­ணர்­கள் மற்­றும் சட்ட வல்­லு­நர்­க­ளின் உத்­தேச வரை­வுத் திட்­டத்தை மாத்­தி­ரமே நாம் நாடா­ளு­மன்­றத்­தில் சமர்ப்­பித்­துள்­ளோம். இனித்­தான் புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கத்­துக்­கான பணி­கள் ஆரம்­ப­மா­க­வுள்­ளன. இதை முளை­யி­லேயே கிள்­ளும் நட­வ­டிக்­கை­ளில் எவ­ரும் ஈடு­ப­டக்­கூ­டாது.

புதிய அர­ச­மைப்­பைக் குழப்­பி­ய­டிக்­கும் நட­வ­டிக்­கை­க­ளில் சில அர­சி­யல்­வா­தி­க­ளும் சில கறுப்பு ஊட­கங்­க­ளும் கள­மி­றங்­கி­யுள்­ளன. இந்த அசிங்­க­மான – மோச­மான நட­வ­டிக்­கை­களை இந்­தத் தரப்­பி­னர் உடன் நிறுத்­த­வேண்­டும்.

நாட்­டில் நீண்­ட­கா­ல­மா­கத் தொட­ரும் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­குப் புதிய அர­ச­மைப்­பின் ஊடாக தீர்­வு­காண இறு­திச் சந்­தர்ப்­பம் கிடைத்­துள்­ளது. இதை எவ­ரும் உதா­சீ­னப்­ப­டுத்­தக்­கூ­டாது – என்­றார்.
 #Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.