போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை நிச்சயம். ஜனாதிபதி உறுதி!

போதைப் பொருள் கைதிகளின் மரணதண்டனை விட்டுக்கொடுக்கமாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

போதைப்பொருள் காரணமாக மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட நூற்றுக்காணக்கான கைதிகளின் ஆவணங்கள் சிறைசாலை அழுவலகங்களில் இருந்து காணமல்போயுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவிற்கு அமைவாக நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் போதையில் இருந்து விடுபட்ட நாடு போதைப்பொருள் தடுப்பு தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் இன்று நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார் மேலும் அவர் உரையாற்றுகையில்

போதைப்பொருள் காரணமாக மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட நூற்றுக்காணக்கான கைதிகளின் ஆவணங்கள் சிறைசாலை மற்றும் நீதி அமைச்சு அழுவலகங்களில் இருந்து காணாமல்போயுள்ளது.

மரணதண்தண்டனை கைதிகள் மரணதண்டடைக்கு ஆளகவேண்டியவாகள் என்ற குறிப்புகள் மட்டும் தான் தற்பொழுது சிறைச்சாலை அழுவலகங்களில் உள்ளது அவர்களின் குற்றம் சம்மந்தமான எந்தவொறு ஆவணங்ளும் சிறை அழுவலகங்களிலும் இல்லை நீதி அமைச்சிடமும் இல்லை.

இதற்காண காரணம் என்னவென்றால் போதைப்பொருள் வியாபாரிகள் அந்த ஆவணங்களை களவாடியிருக்கின்றார்கள். போதைப் பொருள் பின்னணியில் சில அரசியல்வாதிகளும் இருக்கின்றார்கள் சில அரசாங்க உத்தியோகத்தர்களும் இருக்கின்றார்கள் இனிவரும் காலங்களில் நல்லவர்களைபோலிருந்து போதைப்பொருள் வியாபாரிகளுக்கு உதவிபுரியும் அனைவரது தகவல்களையும் நாட்டு மக்களுக்கு வெளியீடுவேண்

அத்துடன் இவ்வாறு மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் ஆவணங்களை எப்படியாவது தேடிக்கண்டுபிடித்து அவர்களுக்காண மரணதண்டனையை நான் விட்டுக்கொடுக்காமட்டேன் என்று உறுதியாக தெரிவித்துக்கொள்கின்றேன்.

நான் இங்கு உரையாற்றிய விடயம் முல்லைத்தீவு மக்களுக்கு மட்டுமல்ல முழு நாட்டு மக்களுக்காவே உரையாற்றுகின்றேன்.

எமது பிள்ளைகளுக்கும் நாட்டுமக்களை மோசமான போதைப்பொருளாள் சீரளித்த ஆட்களுக்கு மண்ணிப்பு வழங்கவேண்டும் என்ற நீங்கள் சொல்லுகின்றீர்கள்.அவர்களை பாதுகாக்கவா சொல்லுகின்றீர்கள் என்று ஜனாதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் தேசிய போதைப்பொருள் தடுப்பு இயக்கத்திற்கு நாட்டு மக்கள் அனைவரது உதவியையும் ஜனாதிபதி எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

உண்மையில் இலங்கையில் இருக்கும் மரணதண்டனை சிறைக்கைதிளில் ஒரே ஒருவருடய ஆவணம் மட்டும்தான் சிறை சிறைச்சாலை அழுவலகத்தில் உள்ளது. குறித நபர் இலங்கை பிரஜை அல்ல அவர் பாக்கிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்.எனவே பாக்கிஸ்தான் நாட்டு பிரஜை ஒருவரை துக்கில்இடவேண்டிய அவசியம் என்கில்லை என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.