யேர்மனி அனுசரனையில் கிளி/வட்டக்கச்சி மாயவனூரில் சிறப்பாக இடம்பெற்ற பொங்கல் பரிசளிப்பு விழா!

யேர்மனி பேர்லினில் உள்ள தமிழ் இளையோர்களின் நிதி உதிவியுடன் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கலை பண்பாட்டுத்துறையும் கல்வி மேம்பாட்டுத்துறையும் இணைந்து நடாத்திய பொங்கல் விழாவும் அறிவொளி கல்வி நிலைய  எழுபது மணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் கிளி/வட்டக்கச்சி மாயவனூர் சிவன் கோயில் முன்றலில் இன்று மாலை சிறப்புற இடம்பெற்றது.


கிளி/கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் திரு.புவனேஸ்வரன் அவர்களது தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்ததுடன் சிறப்பு அதிதியாக முன்னணியின் பொதுச்செயலாளர்  திரு.செல்வராஜா கஜேந்திரன் அவர்களும் கௌரவ அதிதிகளாக மாயவனூர் கிராம சேவகர் திரு.ஜோன் ஜெகநாதன் அவர்களும் முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட உதவி அமைப்பாளர் திரு.மயில்வாகனம் விமலாதரன் அவர்களும் கலந்து கொண்டதுடன்  கல்வி நிலைய ஆசிரியர்கள்,மாணவர்கள் பெற்றோர்கள் கிராம மட்ட அமைப்புக்கள் எனப்பலரும் கலந்து  இந்நிகழ்வை அலங்கரித்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.