இராணுவம் காணிகளை சுருட்டியது !!

எனது 14 பரப்­புக் காணி­யில் 2 பரப்பை மாத்­தி­ரம் விடு­வித்­துக் கொண்டு எஞ்­சிய 12 பரப்­பை­யும் இரா­ணு­வத்­தி­னர் ஆக்­கி­ர­மித்து விட்­டார்­கள்.
காணி விடு­விப்பு என்று சொல்லி ஏமாற்­றி­விட்­டார்­கள்.

இவ்­வாறு தையிட்டி வடக்­கில் நேற்று விடு­விக்­கப் பட்ட காணி­யின் உரி­மை­யா­ளர் ஒரு­வர் தெரி­வித்­தார்.

தையிட்டி வடக்கு மற்­றும் தையிட்டி தெற்கு கிராம அலு­வ­லர் பிரி­வில் 19.64 ஏக்­கர் காணி நேற்று விடு­விக்­கப் பட்­டது.

விடு­விக்­கப்­பட்­ட­தாக அறி­விக்­கப்­பட்ட பகு­தி­க­ளைச் சேர்ந்த மக்­கள் தமது காணி­க­ளைச் சென்று பார்­வை­யிட்­ட­னர். காணி உரி­மை­யா­ளர் ஒரு­வர், தனது 14 பரப்­புக் காணி­யில் 2 பரப்பை மாத்­தி­ரம் இரா­ணு­வத்­தி­னர் விடு­வித் துள்­ள­தா­கத் தெரி­வித்­தார்.

எஞ்­சிய 12 பரப்­பை­யும் முள்­ளுக்­கம்பி வேலி­யால் மறித்து அடைத்­துள்­ள­னர் என்று குற்­றம் சுமத்­தி­னார்.

12 பரப்­புக் காணிக்­குள்­ளேயே தனது வீடு, கிணறு எல்­லாம் உள்­ள­டங்­கு­கின்­றது என்று அவர் மேலும் தெரி­வித்­தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.