சிறு துரும்பைக்கூட விட்­டு­வைக்­காது -வாரி அள்­ளிச் சென்றது இரா­ணு­வம்!!

வலி.வடக்­கில் நேற்று விடு­விக்­கப்­பட்ட பகு­தி­க­ளில் தாம் பாவித்த வீடு­க­ளில் மல­ச­ல­கூ­டங்­க­ளைக் கூட விட்டு வைக்­காது இரா­ணு­வத்­தி­னர் எடுத்­துச் சென்­றுள்­ள­னர்.
இது தொடர்­பில் பொது­மக்­கள் அதி­ருப்தி வெளி­யிட்­டுள்­ள­னர்.
வலி. வடக்­கில் இரா­ணு­வத்­தி­னர் ஆக்­கி­ர­மித்து வைத்­தி­ருந்த 19.64 ஏக்­கர் காணி நேற்று விடு­விக்­கப்­பட்­டது. 25 வீடு­கள் மக்­கள் பாவ­னைக்கு நேற்று மீண்­டது. தமது வீடு­களை ஆவ­லா­கப் போய்ப் பார்த்த மக்­க­ளுக்கு ஏமாற்­றமே மிஞ்­சி­யது.

இரா­ணு­வத்­தி­னர் மக்­க­ளின் வீடு­களை இது­வரை பயன்­ப­டுத்­தி­யி­ருந்­த­னர். இடப்­பெ­யர்­வுக்கு முன்­னர் மக்­கள் பெறு­ம­தி­யான கூரை­களை வீட்­டுக்­குப் போட்­டி­ருந்­த­னர். இரா­ணு­வத்­தி­னர் அதனை அகற்­றி­விட்டு பெறு­மதி குறைந்த கூரை­களை, வடி­வங்­களை மாற்­றிப் பயன்­ப­டுத்­தி­யுள்­ள­னர்.

மேலும், தாம் பாவித்த வீடு­க­ளின் மல­ச­ல­கூ­டங்­க­ளைக் கூட எடுத்­துச் சென்­றுள்­ள­னர். வீடு­க­ளி­லி­ருந்து பெறு­ம­தி­யான பொருள்­க­ளை­யும் இரா­ணு­வத்­தி­னர் கழற்றி எடுத்­துச் சென்­றுள்­ள­னர். இது தொடர்­பில் பொது­மக்­கள் அதி­ருப்­தி­ய­டைந்­துள்­ள­னர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.