உடனடியாககோத்தபாய ராஜபக்சவை கைது செய்து விசாரணை செய்யுங்கள்!

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபய ராஜபக்சவை உடனடியாக கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச ஆகியோர் இணைந்தே இன்று வழக்குகளை தடுக்கும் நடவடிக்கையை எடுத்து வருகின்றனர்.

யாருடைய வழக்கு எப்போது எடுக்க வேண்டும் யாரை காப்பாற்ற வேண்டும் என்ற அனைத்துமே அவர்கள் கையில் தான் இருக்கின்றன. இருவரும் நீதிமன்ற செயற்பாடுகளில் நேரடியாகவே தலையீடுகின்றனர்.

வசீம் தாஜுதீன், லசந்த கொலைகளை மறைக்க கோத்தபய ராஜபக்ச மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து உண்மைகளை மூடி மறைக்கும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கோத்தபாய ராஜபக்ச, லசந்த விக்ரமதுங்கவின் கொலையாளி, யாரெனத் தெரியவேண்டுமானால் தன்னிடம் கேட்க முடியும் என லசந்தவின் மகளிடம் கூறியுள்ளார்.

அவருக்கு கொலையாளி தெரியும் என்றால், அவர் குற்றப் புலனாய்வு பிரிவில் வாக்குமூலம் வழங்கியிருக்கலாம். தற்போது மீண்டும் பழைய நிலைமை நாட்டில் தலைத்தூக்க ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில், கோத்தபாய ராஜபக்சசை உடனடியாக கைது செய்து குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரிக்க வேண்டும்” என நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.