சிலர் குடும்பத்துக்காக கட்சி நடத்துகிறார்கள்: பிரதமர் மோடி


மஹாராஷ்டிராவில் பா.ஜ.க ஊழியர்களிடம் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் பெயரை குறிப்பிடாமல் குடும்ப அரசியலைக் கடுமையாக தாக்கி பேசினார். எங்கள் கட்சியில் ஒரு நபரோ அல்லது ஒரு குடும்பத்தினரோ என்ன விரும்புகிறார்களோ அதை செய்ய முடியாது எனவும் கூறினார். ஆனால் சில கட்சியில் ஒரே ஒரு குடும்பம் தான் அனைத்தையும் முடிவு செய்கிறார்கள். சிலர் குடும்பத்துக்காக கட்சி நடத்துகிறார்கள். நாங்கள் அப்படி இல்லை. எங்களுக்கு கட்சிதான் குடும்பம். கட்சியை குடும்பமாக நினைக்கும் ஒரே கட்சி பாஜக தான் என பிரதமர் மோடி கூறினார். பிரியங்கா காந்தியின் அரசியல் பிரவேசம் குறித்து முறையான அறிவிப்பு வந்தபிறகு பிரதமர் குடும்ப அரசியலை குறித்து பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.