காவலர்கள் பணியின் போது செல்போன் பயன்படுத்தக்கூடாது


உதவி ஆய்வாளருக்கு கீழ் பதவியில் உள்ள காவலர்கள் பணியின் போது செல்போன் பயன்படுத்தக்கூடாது என்று தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். மேலும், பணியின் போது காவலர்கள் அதிகளவில் செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர், கீழ் பதவியில் உள்ள காவலர்கள் பணியின் போது செல்போன் பயன்படுத்தக்கூடாது என்றும் அதிலும் குறிப்பாக முக்கிய பிரமுகர்களின் பந்தோபஸ்தின் போது போக்குவரத்து காவலர்கள் செல்போன்களை பயன்படுத்தக் கூடாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். முன்னதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் தனக்கு ஒதுக்கப்பட்ட வழக்குகளை விசாரிப்பதற்கு முன்பாக பேசினார். அவர், "இன்று காலையில் நான் ஐகோர்ட்டுக்கு வரும் வழியெல்லாம் போக்குவரத்து சிக்னல்களில் போக்குவரத்து போலீஸ்காரர்கள் இருந்ததை பார்த்தேன். அத்தனை பேரும், அங்கு சர்வ சாதாரணமாக உட்கார்ந்துக் கொண்டு செல்போனை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். யாரும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியை செய்யவில்லை. சிக்னலில் என்னுடைய கார் உள்பட ஏராளமான வாகனங்கள் நிற்கின்றன. பச்சை விளக்கு எரியத் தொடங்கியதும், அனைத்து வாகனங்களும் புறப்படும் நேரத்தில், ஒரு பெண்மணி சாலை குறுக்கே ஓடுகிறார். அதை கண்டுக் கொள்ளாமல், போலீஸ்காரர் செல்போனை பார்த்துக் கொண்டிருக்கிறார். என்னைப் பொருத்தவரை பொதுமக்களின் உயிர் பாதுகாப்பு தான் முக்கியம். அந்த பெண்மணி மீது வாகனங்கள் மோதி இருந்தால் என்ன ஆகியிருக்கும்? ஒரு இடம் மட்டுமல்ல, சென்னை முழுவதும் 99 சதவீத போக்குவரத்து போலீஸ்காரர்கள் வேலை செய்வது இல்லை. சாலையோரம், சிக்னல் அருகே உள்ள இரும்பு சேரில் உட்கார்ந்துக் கொண்டு போன் பேசுவது அல்லது போனில் வாட்ஸ்அப் பார்ப்பது உள்ளிட்ட வேலைகளில் ஈடுபடுகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.