சொத்துக்காக கொலை செய்த குடும்பம்.


சென்னையில் சொத்துக்காக குடும்பமே சேர்ந்து முதியவரை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 3 பெண்கள் உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை ஜே.ஜே நகரில் வசித்து வந்தவர் ஏசுராஜன் (70). இவரது மனைவி கலா. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் சொத்து பிரச்சனை தொடர்பாக கலாவின் தம்பி கோபால் என்பவர் ஏசுராஜனிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது, ஏசுராஜன் மறுப்பு தெரிவித்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த கோபால் கத்தியால் குத்தியதில் ஏசுராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஜேஜே நகர் போலீசார் ஏசுராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தலைமறைவான கோபாலை தேடி வந்தனர். போலீசாரின் தீவிர தேடுதலுக்கு பிறகு கோபாலை கைது செய்யப்பட்டார். இந்நிலையில், கோபாலிடம் நடத்திய விசாரணையில் சொத்துக்கு ஆசைப்பட்டு ஏசுராஜனை குடும்பத்துடன் கொன்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து மனைவி கலா, ஏசுராஜனின் மகள் ஜெனிபர் அவரது கணவர் பிரான்சிஸ், கலாவின் தங்கை டெய்சி ஆகியோரை ஜேஜேநகர் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.