நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு முன்னாள் தலைமை நீதியரசருக்கு உயர் நீதிமன்றம் அழைப்பாணை!!
விஜித் மலல்கொட, முர்து பெர்ணான்டோ, எஸ்.துரைராஜா உள்ளிட்ட நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது பிரதிவாதியான சரத் என் சில்வாவும் மன்றில் முன்னிலையாகியிருந்தார்.
ஊடகங்களினூடாக வெளியான தகவலை அடிப்படையாகக் கொண்டே சரத் என் சில்வா மன்றில் முன்னிலையாகியிருந்ததாகவும், அவருக்கு அழைப்பாணை எதுவும் விடுக்கப்பட்டிருக்கவில்லை எனவும் அவர் சார்பில் முன்னிலையான அரச தலைவர் சட்டத்தரணி ரொமேஷ்டி சில்வா தெரிவித்தார்.
இதனை ஆராய்ந்த நீதியரசர்கள் குழாம், எதிர்வரும் 7ஆம் திகதி மன்றில் முன்னிலையாகுமாறு முன்னாள் தலைமை நீதியரசருக்கு அழைப்பாணை விடுத்துள்ளது.
2018ஆம் ஆண்டு மருதானையில் நடைபெற்ற பேரணியொன்றின்போது, முன்னாள் நீதியரசர், நீதிமன்றத்தை அவமதித்ததாக, மூத்த பேராசிரியர் சந்திரகுப்த தேனுவர, பேராசிரியர் ஹேவாவடுகே சிறில், மூத்த பேராசிரியர் பிரஷhந்த குணவர்தன ஆகியோர் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை