மீண்டும் அசோக் செல்வனுடன் நடிக்கும் ஜனனி!
தெகிடி திரைப்படம் வெளியாகி 5 ஆண்டுகள் ஆகும் நிலையில் ஜனனியும் அசோக் செல்வனும் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளனர்.
2014ம் ஆண்டு பி.ரமேஷ் இயக்கத்தில் வெளியானி திரைப்படம் தெகிடி. இந்த படத்தில் அசோக் செல்வன் மற்றும் ஜனனி ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைபடத்திற்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேறப்பு கிடைத்திருந்தது.
குறிப்பாக நிவாஸ் கே. பிரசன்னாவின் இசையில் உருவான விண்மீன் விதையில் பாடல் பெரும் வெற்றியை பெற்றது. இந்நிலையில் இந்த ஜோடி மீண்டும் இணைந்து நடிக்க உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜனனி நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் திரைப்படம் இது. இதுகுறித்து அவர் கூறும் போது, எனக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்தாலும் மிகவும் தேர்வு செய்தே நான் படங்களில் நடிக்கிறேன். இந்த ஸ்கிரிப்ட் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மேலும் அசோக் செல்வனுடன் மீண்டும் நடிப்பதில் மகிழ்ச்சி. நண்பர்களுடன் இணைந்து பணிப்புரிய அனைவருக்கும் பிடிக்கும் தானே" என்றார்.
மேலும் இந்த படத்தை இயக்கும் புதுமுக இயக்குநர் சந்தீப் ஷ்யாம் கூறும் போது, இந்த படம் ரொமான்டிக் மற்றும் மிஸ்ட்ரி ஜானரில் இருக்கும். இதில் மிகவும் முதிர்ச்சியாகவும், நம்பிக்கையுடனும் நடிக்கும் நடிகர்கள் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால் தான் ஜனனி மற்றும் அசோக் செல்வனை தேர்வு செய்தேன். முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டது. அடுத்து பிப்ரவரியில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும்" என்றார்.

.jpeg
)





கருத்துகள் இல்லை