காஞ்சனா இந்தி ரீமேக்கில் நாயகனாக நடிக்கும் ரஜினி வில்லன்
காஞ்சனா திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நாயகனாக நடிக்கிறார்.
ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான திரைப்படம் காஞ்சனா. இது முனி படத்தின் இரண்டாவது பாகமாகும். இந்தபடத்தில் ஹீரோயினாக ராய் லட்சுமி நடித்திருப்பார். மேலும் சரத்குமார், கோவை சரளா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தனர்.
இந்த திரைப்படம் வசூல் ரீதியாக பெரும் வெற்றியைப் பெற்றது. இதனையடுத்து இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளியானது.
இந்நிலையில் காஞ்சனா திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படவிருக்கிறது. இதனையும் ராகவா லாரன்ஸ் தான் இயக்குகிறார். இந்த படத்தில் அக்ஷய் குமார் நாயகனாக நடிக்க இருக்கிறார். பாலிவுட்டின் முன்னணி நடிகரான இவர் 2.0 படத்தில் வில்லனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

.jpeg
)





கருத்துகள் இல்லை