வேலைவாய்ப்பு பதிவினை புதுப்பிக்க தவறியவர்களுக்கு இன்று கடைசி வாய்ப்பு


தமிழகத்தில் வேலைவாய்ப்பு பதிவினை புதுப்பிக்க தவறியர்கள், தற்போது புதுப்பித்துக் கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு வேலைவாப்பு மற்றும் பயிற்சித் துறை அறிவித்திருந்தது. இதற்கு கடைசி நாள் இன்று (வியாழக்கிழமை) ஆகும். தமிழக அரசால் சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த ஜனவரி 2011 முதல் டிசம்பர் 2016 வரை தங்கள் பதிவினை புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் tnvelaivaaippu.gov.in என்ற இணையதளம் வாயிலாகவோ அல்லது சம்பந்தப்பட்ட மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ, புதுப்பித்துக் கொள்ளலாம் எனவும், இதனை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறும், தமிழ்நாடு அரசு வேலைவாப்பு மற்றும் பயிற்சித் துறை அறிவித்திருந்தது. இதற்கான காலக்கெடு இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.