தலைவரின் நம்பிக்கைகுரிய பாடசாலை நாசமாகிக்கொண்டிருக்கிறது!


-த.செல்வா- சில வருடங்கள் முன் வரைக்கும் கிளிநொச்சி மாவட்டத்தில் சிறப்பாக விளங்கிய ஒரு பாடசாலை இன்று கண் முன்னே நாசமாய் போய்கின்கொண்டிருப்பதனை எண்ணும் போது கண்ணீர் வருகிறது.


தலைவரின் நம்பிக்கைக்குரிய பாடசாலையாகவும் அது விளங்கியது. மீள்குடியேற்றத்திற்கு பின்னரும் கல்வி மற்றும் ஏனைய செயற்பாடுகளிலும் சிறப்பாக செயற்பட்ட பாடசாலை அது.

ஆனால் தற்போது தலைமைத்துவத்தின் ஆணவத்தினால், தலைமைத்துவதின் வினைத்திறனற்ற செயற்பாடுகளால் குறித்த பாடசாலை சீரழிகிறது.

அதிபருக்கும் பிரதி அதிபர் உப அதிபர்களுக்கிடையே பிரச்சினை, அதிபருக்கும் ஆசிரியர்களுக்கும் பிரச்சினை, அதிபருக்கும் மாணவர்களுக்கும் இடையே பிரச்சினை, அதிபருக்கும் பெற்றோருக்கும் இடையே பிரச்சினை, அதிபருக்கும் பழைய மாணவர்களுக்கும் இடையே பிரச்சினை,அதிபருக்கும் பெற்றோர்  ஆசிரியர் சங்கத்திற்கும் இடையே பிரச்சினை என்று சாதனைகள் தொடர்ந்த பாடசாலையில் தற்போது பிரச்சினைகள் தொடர்கிறது.

குறித்த பாடசாலையின் தலைமை இவ்வாறு அனைவருடனும் பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொண்டு எவ்வாறு பாடசாலையினை  கொண்டு  செல்லப் போகின்றார் என்பது தெரியவில்லை? இந்தப் பாடசாலை தற்போது கலை மற்றும் விளையாட்டுச் செயற்பாடுகளில் கடந்த காலங்கள் போன்று எந்த சாதனைகளும் இன்றி கீழ் நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது.

 ஆளுமையுள்ள ஆசிரியர்கள், திறமையான ஆசிரியர்கள் பாடசாலையிலிருந்து வெளியேற்றப்படுகின்றார்கள், வெளியேறுகின்றார்கள். இதனால் பாடசாலையின் செயற்பாடுகளும் வீழ்ச்சி அடைந்து செல்கிறது.

கடவுளே பாடசாலையை இனி நீதான்  காப்பாற்ற வேண்டும் அங்கு கல்வி கற்கும் பிள்ளைகளை  அருள்புரிவாயாக  வாணியே வந்திறங்கு.

மகாபாரத அழிவு பாஞ்சாலியால் வந்தது இராமாயான போர் சீதையால் வந்தது. இந்தப் பாடசாலையின் அழிவும்...........!!

No comments

Powered by Blogger.